சேனைக்கிழங்கு மகசூல் அதிகரிப்பு: தூத்துக்குடி விவசாயிகள் மகிழ்ச்சி

சேனைக்கிழங்கு மகசூல் அதிகரிப்பு: தூத்துக்குடி விவசாயிகள் மகிழ்ச்சி
சேனைக்கிழங்கு மகசூல் அதிகரிப்பு: தூத்துக்குடி விவசாயிகள் மகிழ்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் சேனைக்கிழங்கு பயிரில் நல்ல மகசூல் கிடைத்திருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். 

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தை சுற்றி 1,000க்கும் மேற்பட்ட மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சேனைக்கிழங்கு பயிரிட்டு வருகின்றனர். இந்த பயிர் பொதுவாக வருடந்தோறும் சித்திரை மாதம் (மே அல்லது ஜூன்) மாதங்களில் பயிரிடப்பட்டு ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தை பொங்கலுக்கு அறுவடைக்கு தயாராகிவிடும். அதன்படி, ஓட்டப்பிடாரம் வட்டத்தில் சேனைக்கிழங்கு அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டுகளைவிட இந்த ஆண்டு மகசூல் அதிகரித்துள்ளதாகவும், மேலும், இந்த ஆண்டு கிலோ ரூ.20 வரை விற்பனையாவதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயி கூறும்போது, "ஒட்டப்பிடாரம் பகுதியைச்சுற்றி கிட்டத்தட்ட 1,000 க்கும் மேற்பட்ட மானாவாரி நிலத்தில் சேனைக்கிழங்கு பயிரிட்டு வருகிறது. விவசாயிகள், 6 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு பயிரிட்டுள்ளனர். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கு காரணமாக மகசூல் இல்லாத நிலையில், இந்த வருடம் சேனைக்கிழங்குக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் கிலோ ரூ. 20 வரை விலைபோகிறது.



சாகுபடி செய்யும்போது ஏற்படும் விதை கிழங்கு, இடையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து போன்ற செலவுகள் காரணமாக  கூடுதலாக 25 ரூபாய்க்கு மேல் விற்பனை நடைபெற்றால் போதுமானதாக இருக்கும் என்ற அவர், இந்த எட்டு மாத காலப்பயிருக்கு குறைந்தபட்ச கலாசார செயல்பாடு மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவை.

பாசன முறையில் இந்தப் பயிரின் தாவர வளர்ச்சியை அதிகரிக்க, யூரியாவை கடலைப் புண்ணாக்குடன் அடியுரமாக இடப்பட்டு சாகுபடியின்போது, பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்படாமல் இயற்கை முறையில் பக்குவமாக செய்துவருகிறோம்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com