திருச்சியில் ஏர்க்கலப்பையுடன் சாலையில் படுத்து விவசாயிகள் மறியல் போராட்டம்

திருச்சியில் ஏர்க்கலப்பையுடன் சாலையில் படுத்து விவசாயிகள் மறியல் போராட்டம்
திருச்சியில் ஏர்க்கலப்பையுடன் சாலையில் படுத்து விவசாயிகள் மறியல் போராட்டம்

திருச்சி கரூர் பைபாஸ் சாலையில், ஏர்கலப்பையுடன் சாலையில் படுத்து மறியல் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை திரும்பப்பெற  வலியுறுத்தி திருச்சி கரூர் பைபாஸ் சாலையில், அகில இந்திய விவசாய சங்கங்களின் போராட்டக்குழு சார்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் ஏர் கலப்பையுடன் அண்ணாமலை நகரில் இருந்து பாஸ்போர்ட் சேவா மையம் 4 சந்திப்பு சாலை வரை பேரணி நடத்தினர். பின்னர் சாலையில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சாலை மறியலால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கைது செய்தனர்

முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டார். நேற்று  தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த பயிர் கடன்  தள்ளுபடி என்பது செயல்வடிவம் பெற வேண்டும் எனவும் 110 விதியின் கீழ் அறிவிப்பாக இருக்க கூடாது எனவும் இந்த அறிவிப்பிற்கு  நன்றியை தெரிவித்தும் இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com