டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்

டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்
டெல்லி ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விவசாயிகள் இன்று போராட்டம்.

விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு சங்கமான, சன்யுக்த் கிசான் மோர்ச்சா அறிவித்துள்ள இந்த போராட்டத்திற்கு டெல்லி காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து , தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட உள்ளன.

விவசாயிகளின் பிரதான கோரிக்கைகளாக, சுவாமிநாதன் ஆணைய அறிக்கை அமலாக்கல் படுத்துதல், விவசாயிகள் மீதான வழக்குகள் மற்றும் மின்சார சட்டதிருத்த மசோதா- 2022 வாபஸ், குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்தல் , விவசாயிகளுக்கு 5000 ரூபாய் ஓய்வூதியம் , கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து விவசாயத்தைக் காப்பாற்றுவதும், விவசாயிகளின் வருமானத்தை உறுதி செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட உள்ளது.

இப்போராட்டத்தில் , கன்னியாகுமரியில் தொடங்கி பேரணியாக பல்வேறு மாநிலங்கள் வழியே டெல்லி வந்துள்ள தமிழக விவசாயிகள் பங்கேற்கின்றனர். முன்னதாக , மத்திய அரசின் மூன்று வேளாண் சட்ட திருத்த மசோதாக்களை வாபஸ் பெறக் கோரி கடந்த 2020, ஆக.9 முதல் 2021 டிச.11ம் தேதி வரை டெல்லியின் எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் , மத்திய அரசு அளித்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்ற கோரி இந்த போராட்டம் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ள நிலையில் மத்திய அரசு விவசாயிகள் விவகாரத்தில் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com