அறுவடை செய்ய இருந்த நேரத்தில் மழையில் சாய்ந்த பயிர்கள் - வேதனையில் தஞ்சை விவசாயிகள்

அறுவடை செய்ய இருந்த நேரத்தில் மழையில் சாய்ந்த பயிர்கள் - வேதனையில் தஞ்சை விவசாயிகள்
அறுவடை செய்ய இருந்த நேரத்தில் மழையில் சாய்ந்த பயிர்கள் - வேதனையில் தஞ்சை விவசாயிகள்

தொடர் மழையால் தஞ்சை மாவட்டத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் அம்மாபேட்டையில் தற்போது செய்யப்பட்ட சம்பா சாகுபடியும் வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கி அழுகும் நிலை உள்ளதாக கூறுகின்றனர் விவசாயிகள்.

ஒருபுறம் அறுவடைக்குத் தயாராக இருந்த குறுவை நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து கிடக்கின்றன. மறுபுறம், நடவு செய்து சில நாட்களே ஆன சம்பா பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. இதுதான் தஞ்சை மாவட்டத்தில் ஆங்காங்கே காணப்படும் காட்சி. மாவட்டத்தில் குறுவை அறுவடைப்பணிகள் பெரும்பாலும் முடிந்தநிலையில், சுமார் 20 ஆயிரம் ஏக்கரிலான குறுவை பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன. இந்த சூழலில் பெய்த தொடர்மழையால் வயலில் தலைசாய்ந்து கிடக்கும் பயிர்களை மிகவும் சிரமப்பட்டு அறுவடை செய்துவருகிறார்கள் விவசாயிகள்.

இதே நேரம், தஞ்சை மாவட்டம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் ஏக்கரில் சம்பா நடவுப்பணிகள் முடிந்தநிலையில், அம்மாபேட்டையில், நட்டு சில நாட்களே ஆன சம்பா பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. அறுவடை முடிந்த குறுவை நெல்லை தாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும், வயலில் தேங்கும் மழைநீருக்கு வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறார்கள் விவசாயிகள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com