விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைகளிலேயே தொடரும்: ராகேஷ் டிக்கைட் அறிவிப்பு

விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைகளிலேயே தொடரும்: ராகேஷ் டிக்கைட் அறிவிப்பு
விவசாயிகள் போராட்டம் டெல்லி எல்லைகளிலேயே தொடரும்: ராகேஷ் டிக்கைட் அறிவிப்பு

விவசாயிகளின் போராட்டத்தை டெல்லி எல்லைகளிலிருந்து ஹரியானாவிற்கு  மாற்ற மத்திய அரசு விரும்புகிறது, ஆனால் போராட்டம் டெல்லியிலேயே தொடரும் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்தார்.

மத்திய அரசின் மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் 6 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லையில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் கடுமையாக உள்ள சூழலிலும் போராட்டத்தை தொடர்ந்து விவசாயிகள் நடத்துகின்றனர்.

தற்போது விவசாயிகள் கூட்டத்தில் உரையாற்றிய ராகேஷ் டிக்கைட், "டெல்லி எல்லைகளிலிருந்து ஹரியானாவின் ஜிண்டிற்கு போராட்டம் மாற வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. ஆனால் அவர்களின் சூழ்ச்சி வெற்றிபெற நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாங்கள் எந்த விலை கொடுத்தாலும் டெல்லி எல்லைகளை விட்டுவிடமாட்டோம்" என்று அவர் கூறினார். ஹரியானாவில் டோல் பிளாசாக்கள் உட்பட பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்கள் முன்பு போலவே தொடரும் என்றும் டிக்கைட் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com