சொட்டு நீர்ப் பாசனத்துக்குப் பழைய குளூக்கோஸ் பாட்டில்கள்.. மாத்தி யோசித்த ம.பி விவசாயி..!

சொட்டு நீர்ப் பாசனத்துக்குப் பழைய குளூக்கோஸ் பாட்டில்கள்.. மாத்தி யோசித்த ம.பி விவசாயி..!
சொட்டு நீர்ப் பாசனத்துக்குப் பழைய குளூக்கோஸ் பாட்டில்கள்..  மாத்தி யோசித்த ம.பி விவசாயி..!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர், குப்பையில் தூக்கியெறியப்படும் குளூக்கோஸ் பாட்டில்களை விவசாயத்திற்குப் பயன்படுத்திச் சாதித்துள்ளார். நீரின்றி வாடும் பயிர்களை எப்படி காற்றப்போகிறோம் என்ற கவலையில் இருந்த விவசாயி பாரியா, வேளாண் நிபுணர்கள் உதவியுடன் சாதித்துள்ளார்.  

வறட்சியால் வாடும் தானியப் பயிர்களைக் காப்பாற்ற சொட்டு நீர்ப்பாசனத்திற்கு குளூக்கோஸ் பாட்டில்களைப் பயன்படுத்தலாம் என்று நேஷனல் அக்ரிகல்ச்சுரல் இன்னோவேஷன் புராஜெக்ட் அமைப்பைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள், ஆலோசனை தெரிவித்தனர்.

இந்தப் புதுமையான சொட்டுநீர்ப் பாசனம் மூலம் ஒரு ஹெக்டேருக்கு விவசாயி பாரியா, 15,200 ரூபாய் லாபம் பார்த்திருக்கிறார். பயிர்களைக் காப்பாற்றியதோடு மட்டுமல்ல, நீரையும் வீணடிக்காமல் பயன்படுத்தி நீர் மேலாண்மை செய்திருக்கிறார்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் பழங்குடி மக்கள் நிறைந்த ஜாப்பூவா மாவட்டத்தில் தானியங்களையும் காய்கறிகளையும் போதிய நீரில்லாமல் விவசாயம் செய்ய முடியாத சூழல். இதனையடுத்து, ரமேஷ் பாரியா போன்ற விவசாயிகள் புதுமையான நீர்ப்பாசன முறைகளுக்கு மாறியதால் வேளாண் உற்பத்தியில் லாபம் அடைந்துள்ளனர்.

கிராமத்தில் சிறிய அளவில் பழைய முறையில்  பாகற்காயும், சுரைக்காயும் விவசாயம் செய்யத்தொடங்கினார். நீரில்லாமல் பயிர்கள் வாடின. இதையறிந்த உடன் வேளாண் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்டு, குளூக்கோஸ் பாட்டில் சொட்டநீர் முறையைப் பயன்படுத்தத் தொடங்கினார். நீரும் வீணாகவில்லை. பயிரும் வாடவில்லை.

ஒரு கிலோ இருபது ரூபாய்க்கு அந்த் பாட்டில்களை வாங்கினார். அதனை அமல்படுத்திய விவசாயி பாரியா, தினமும் அந்த பாட்டில்களில் தண்ணீரை நிரப்பிவிட்டு பள்ளிக்குச் செல்லுமாறு தன் குழந்தைகளிடம்  கேட்டுக்கொண்டார். இன்று அந்த கிராமத்தில் மற்ற விவசாயிகளும் சொட்டுநீர்ப் பாசனத்திற்குத் தாவியுள்ளனர். தற்போது மாவட்ட நிர்வாகம், பாரியாவின் புதுமையான விவசாய முயற்சியைப் பாராட்டி சான்றிதழ் அளித்துள்ளது. மனிதர்களின் உயிரைக் காப்பாற்றிய குளூக்கோஸ் பாட்டில், இங்கே பயிர்களின் உயிரைக் காப்பாற்றவும் பயன்படுவது வாழ்க்கையின் விந்தை. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com