“வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம்” - ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா

“வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம்” - ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா
“வேளாண் சட்டங்கள் திரும்பக் கொண்டுவரப்படலாம்” - ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா

தேவைப்பட்டால் மூன்று வேளாண் சட்டங்களும் மீண்டும் கொண்டு வரப்படலாம் என்று ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளது சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

விவசாயிகளின் தொடர் போராட்டங்கள் காரணமாக மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமையன்று ரத்து செய்தார். இது குறித்து பேசிய  ராஜஸ்தான் ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, “விவசாயிகளுக்கு வேளாண் சட்டங்களின் சாதகங்களை விளக்க அரசாங்கம் முயற்சித்தது. ஆனால் அவர்கள் அச்சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக இருந்தனர். தற்போது இச்சட்டங்களை திரும்பப் பெற்று, தேவைப்பட்டால் பின்னர் மீண்டும் கொண்டுவரலாம் என்று அரசாங்கம் கருதுகிறது” என தெரிவித்தார்

பாஜக எம்பி சாக்ஷி மகாராஜும், “வேளாண் சட்டங்களுக்கும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை, பிரதமருக்கு தேசம்தான் முதலில். மசோதாக்கள் வருகின்றன, அவை ரத்து செய்யப்படுகின்றன, அவை மீண்டும் வரலாம், மீண்டும் வரைவு செய்யப்படலாம்என தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு வேளாண் சட்டங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் என்று ஆர்எல்டி தலைவர் ஜெயந்த் சவுத்ரி ஏற்கனவே விவசாயிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் வைபவ் மகேஸ்வரி கூறியதாவது, “பிரதமர் மோடியின் வார்த்தைகளில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லாதது விந்தையானது. இன்று, பிரதமரின் வார்த்தைகளுக்கு மதிப்பே இல்லாத நிலையை நாடு எட்டியுள்ளது. இந்த விவசாயச் சட்டங்களை நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறும்போது மத்திய அரசை நம்புவோம் என்று விவசாயிகள் கூறுகின்றனர்என தெரிவித்தார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com