டெல்லி போராட்டக்களத்தில் நிரந்தர கட்டுமானங்களை உருவாக்க வேண்டாம்: விவசாய சங்க கூட்டமைப்பு
விவசாயிகளின் கூட்டு சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) அமைப்பு, மத்திய அரசின் பண்ணை வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம் நடத்தும் இடங்களில் நிரந்தர கட்டுமானங்களை அமைப்பதை நிறுத்துமாறு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களாக கோடை வெப்பத்தையும் மழையையும் சமாளிக்க திக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் மூங்கில், தகரம், ஒட்டு பலகை மற்றும் செங்கற்களைப் பயன்படுத்தி தங்குமிடம் கட்டி வந்தனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (என்.எச்.ஏ.ஐ) புகாரின் பேரில் குண்ட்லி போலீசார் விவசாயிகளுக்கு எதிராக, செங்கல் வீடுகளை கட்டியமைத்தல் மற்றும் நெடுஞ்சாலையில் போர்வெல் தோண்டியமை என இரண்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து "மார்ச் 12 அன்று 32 பஞ்சாப் உழவர் சங்கங்கள், போராட்டம் செய்யும் விவசாயிகள், போராடும் இடங்களில் எந்தவொரு நிரந்தர கட்டமைப்பையும் கட்டக்கூடாது என்று முடிவு செய்தனர். சிங்கு எல்லையில் இதுபோன்ற சில கட்டமைப்புகள் வரவிருக்கும் சூழ்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது ”என்று எஸ்.கே.எம் தலைவர் தர்ஷன் பால் தெரிவித்தார்.
இந்த கட்டமைப்புகளில் பலவற்றில், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதன பெட்டிகள், விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளை பலர் நிறுவியிருந்தனர். ஹரியானாவில் உள்ள ஜிந்தைச் சேர்ந்த விவசாயி கிஷன் பால் சிங்,"கட்டடப் பொருட்கள் கிராமங்களிலிருந்து மொத்தமாக அல்லது அருகிலுள்ள கடைகளிலிருந்து வாங்கப்பட்டன. மின்விசிறிகள் மற்றும் குளிரூட்டிகளைப் பயன்படுத்துவதற்காக மக்கள் எங்களை சமூக ஊடகங்களில் கேள்வி கேட்பதை நாங்கள் காண்கிறோம். ஆனால் போராட்டத்தில் 200 விவசாயிகள் இறந்ததை விட அவர்கள் இதைப் பற்றி அதிகம் கவலைப்படுவது வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்தார்
திக்ரியில் தன்னார்வத் தொண்டு செய்து வரும் அனில் மாலிக், 109 நாட்களாக நீடிக்கும் இந்த போராட்டம் எவ்வளவு காலம் தொடரும் என்பது விவசாயிகளுக்கு தெரியாது என்று கூறினார். இது 10-20 நாட்கள் இருந்திருந்தால், நாங்கள் சாலைகளில் தங்கியிருக்க முடியும். இங்கு வயதானவர்கள் உள்ளனர் மற்றும் பலர் வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயத்தில் உள்ளனர், மழை வாய்ப்பும் இருக்கிறது. எந்தவொரு கட்டமைப்பையும் கட்ட வேண்டாம் என்று எங்கள் தலைவர்கள் எங்களிடம் கேட்டிருந்தால், நாங்கள் அதை மதிக்கிறோம். ஆனால் அவர்கள் மாற்று வழிகளை பரிந்துரைக்க வேண்டும் ” என்றார்.