\
விவசாயிகளுக்கு ஆதரவராக திமுக உண்ணாவிரதம் எதிரொலி: ட்விட்டரில் ட்ரெண்டிங் மோதல்!

விவசாயிகளுக்கு ஆதரவராக திமுக உண்ணாவிரதம் எதிரொலி: ட்விட்டரில் ட்ரெண்டிங் மோதல்!

விவசாயிகளுக்கு ஆதரவராக திமுக உண்ணாவிரதம் எதிரொலி: ட்விட்டரில் ட்ரெண்டிங் மோதல்!
Published on

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவராக திமுக இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்திவரும் நிலையில், ட்விட்டரில் #DMKforfarmers ஹேஷ்டாக் டாப் ட்ரெண்டாகி வருகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 23 நாட்களாக தொடர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தப் போரட்டத்துக்கு ஆதரவாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் இன்று உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த சூழலில், ட்விட்டரில் #DMKforfarmers என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் இரண்டாவது இடத்திலும், #FarmersDyingModiEnjoying என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் 4-வது இடத்திலும் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த ஹேஷ்டேக்குகளுக்கு போட்டியாக #ModiWithFarmers என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com