தருமபுரி: விளைச்சல் இருந்தும் விலையில்லை - வேதனையில் வெற்றிலை விவசாயிகள்

தருமபுரி: விளைச்சல் இருந்தும் விலையில்லை - வேதனையில் வெற்றிலை விவசாயிகள்
தருமபுரி: விளைச்சல் இருந்தும் விலையில்லை - வேதனையில் வெற்றிலை விவசாயிகள்

தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சுப நிகழ்ச்சிகள் இல்லாததால் விலை குறைந்துள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் பால்கோடு, பென்னாகரம், மாரண்டஹள்ளி, வெள்ளோலை, மிட்டரெட்டிஹள்ளி, மிட்டாதின்னஹள்ளி, பாளையம்புதூர், நடுப்பட்டி, கிருஷ்ணாபுரம், அரூர், கடத்தூர், பொம்மிடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கு மேல் வெள்ளை, கருப்பு ரக வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

இங்கு விளையும் வெற்றிலை சேலம், ஈரோடு, கோவை, பவானி உள்ளிட்ட இடங்களுக்கு வாரத்தில் நான்கு நாட்களுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் வெற்றிலை விளைச்சல் அதிகரித்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் வெற்றிலை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

ஆனால், தருமபுரி மாவட்டத்தில் ஒரு கட்டு ரூ.40 முதல் 70 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தருமபுரி மாவட்டத்தில் ஒரு மூட்டையில் 128 கட்டு வெற்றிலை ரூ.4000 முதல் 8000 வரை விற்பனையாகிறது. கடந்த வாரம் ஒரு மூட்டை ரூ.12,000 வரை விற்பனையான நிலையில், வெற்றிலை வரத்து அதிகரிப்பால், விலை கடுமையாக சரிந்துள்ளது.

மேலும் திருமண உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் இல்லாததால், போதிய வருவாய் கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு வெற்றிலை விலை உயர வாய்ப்பில்லை என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com