தருமபுரி: வரத்து குறைவு; விலை அதிகம் - பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி: வரத்து குறைவு; விலை அதிகம் - பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி

தருமபுரி: வரத்து குறைவு; விலை அதிகம் - பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சி
Published on

அரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம் அரூர் கூட்டுறவு வேளாண்மை விற்பனைக் கடன் சங்கத்தில் வாரந்தோறும், திங்கட் கிழமைகளில் பருத்தியும், வியாழக்கிழமை கொப்பரை தேங்காயும், வெள்ளிக் கிழமைகளில் மஞ்சளும் ஏலம் விடப்பட்டு வருகிறது. இங்கு, விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் பயிரிடப்படும் பருத்தி, மஞ்சள் மற்றும் கொப்பரை தேங்காய்களை எடுத்து வந்து விற்பனை செய்து பணத்தை பெற்றுச் செல்கின்றனர்.

இதில் அரூர், கடத்தூர், பொம்மிடி, கம்பைநல்லூர், கோட்டப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த 302 விவசாயிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் கொண்டுவந்த 1950 பருத்தி மூட்டை ரூ55 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில், ஆர்சிஎச் ரக பருத்தி குவிண்டால், வர லட்சுமி (டிசிஎச்) ரகம் ரூ.6800 முதல் ரூ.7769 வரையில் ஏலம் போனது.

கடந்த வாரத்தைவிட பருத்தி வாரத்து குறைந்திருந்தாலும் கூடுதல் விலைக்கு விற்பனையானது. கடந்த வாரம் 2450 மூட்டை பருத்தி ரூ.62 லட்சத்திற்கு விற்பனையான நிலையில், நேற்று 1950 மூட்டை பருத்தி ரூ.55 லட்சத்திற்கு ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com