\
தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை

தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனை
Published on

திருத்துறைப்பூண்டி பகுதிகளில் பெய்யும் தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த 1000 ஏக்கர் சம்பா பயிர்கள் சேதமடைந்தன இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. திருத்துறைப்பூண்டியில் 11 சென்டி மீட்டரும், முத்துப்பேட்டையில் அதிகபட்சமாக 19 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இதனால் திருத்துறைப்பூண்டி வட்டத்துக்கு உட்பட்ட சாகுபடி பகுதிகளில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள சம்பா பயிர்கள் மழையால் பாதிக்கப்பட்டு சாய்ந்துள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை செய்துவிடலாம் என்று விவசாயிகள் எண்ணியிருந்த நிலையில், தற்போது பெய்த மழையால் நெற் பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com