`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்

`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்
`நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி எங்க நிலத்தை வாங்க வேண்டும்”- கடலூர் விவசாயிகள்

“என்.எல்.சி க்கு நிலம் கொடுப்பவர்களுக்கு ஒரே மாதிரியான இழப்பீடு வழங்க வேண்டும்” எனக் கோரி, கடலூரில் 7 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து `குறை தீர்க்கும் கூட்டத்தில்’ மாவட்ட ஆட்சியரிடம் இன்று புகார் அளித்துள்ளனர்.

என்.எல்.சி சுரங்க விரிவாக்கத்திற்காக கடலூரில் சில இடங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது. கடலூரில் கடந்த 1957 ம் ஆண்டு முதல், பழுப்பு நிலக்கரியில் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக கொஞ்சம் கொஞ்சமாக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகின்றனர். அங்கெல்லாம் இருந்து கிராம மக்களும் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அப்படி இதுவரை 69 கிராமங்களில் பழுப்பு நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டு, அங்கிருந்த இடங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இன்னும் 29 கிராமங்களில் நிலக்கரியின் இருப்பு அறியப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அங்குள்ள விவசாயிகள், தங்களின் நிலங்களை என்.எல்.சிக்கு தர இம்முறை சில நிபந்தனைகள் விதித்துள்ளனர். அதில் “என்.எல்.சி எங்கள் நிலத்தை தோண்டி எடுத்து ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 6.50 கோடி முதல் ரூ. 12 கோடி வரை லாபம் ஈட்டுகிறது. அதே சமயம் எங்களுக்கு சொற்ப தொகைதான் தருகிறது. ஆகவே எங்களுக்கு இழப்பீடு வேண்டும். மேலும் எங்களுக்கு நிரங்தர பணி வழங்க வேண்டும்” என்றனர்.

இன்று நடந்த விவசாய குறைதீர்க்கும் கூட்டத்தில் இதுதொடர்பாக பங்கேற்ற சுமார் 7 கிராம மக்கள், விவசாயிகள், அவர்களின் பிரதிநிதிகள், “நாங்கள் சொல்லும் விலைக்கு தான் என்.எல்.சி நிறுவனம், எங்கள் நிலத்தை வாங்க வேண்டும் தவிர, அவர்கள் சொல்லும் விலைக்கு நாங்கள் எங்கள் நிலத்தை விற்கமாட்டோம்” என்று கோரிக்கை அளித்துள்ளனர்.

மேலும் தங்கள் கோரிக்கை மனுவில், “இதில் எங்களுக்கான இழப்பீடு கிடைக்கவில்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்” என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதை தவிற “எல்லா நிலத்தாரர்களுக்கும் ஒரேமாதிரியான பணத்தை என்எல்சி வழங்கவேண்டும். என்எல்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாக துணையோடு காவல் துறையை வைத்து மிரட்டி நிலங்களை கையகப்படுத்த முயற்சித்து வருகிறது. அதனால் எங்களுக்கு பாதுகாப்பு தேவை. மேலும் எங்கள் கோரிக்கையை ஏற்காவிட்டால் நாங்கள் ஒருபோதும் நிலத்தை தர மாட்டோம்” என்று கூறியுள்ளார்கள்.

இதற்கான பதிலை என்.எல்சி, நிறுவனம் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. அதற்கு காரணம், நிலம் கையகப்படுத்தும் பணி என்பது மாவட்ட ஆட்சியர் மூலமாகவும், மாவட்ட நிர்வாகிகள் மூலமாகவும் நடைப்பெறுகிறது. இதில் மாவட்ட ஆட்சியர், நில உரிமையாளாரிடம், நிரந்தர பணி குறித்து உத்தரவாதம் அளிக்கவில்லை. அதே போல் ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 லட்சம் தான் என்று கூறுவது விவசாயிகளின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதனால் விவசாய்கள் “எங்கள் நிலத்தை எங்களிடமே விட்டு விடுங்கள். அதில் நாங்கள் விவசாயம் செய்துக் கொள்கிறோம்” என்கிறார்கள். இதைத்தொடர்ந்து இவ்விஷயம் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரிடத்தில் இன்று மனு அளித்த விவசாயிகளிடத்தில், ஆட்சியர், “இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும்” என்றுள்ளார்.

இது குறித்து விரிவாக செய்தியினை தெரிந்துக்கொள்ள கீழே உள்ள வீடியோவை காணலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com