கரும்பு விலை சரிவு: அரசே நேரடியாக கொள்முதல் செய்யக் கோரிக்கை
பொங்கல் கரும்புகளை குறைந்த விலைக்கு கேட்பதால் மிகுந்த இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக கடலூர் மாவட்ட கரும்பு விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையையொட்டி கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பன்னீர்கரும்புகள், செங்கரும்புகள் என அழைப்படும் பொங்கல் கரும்புகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. பொங்கல் நெருங்கும் நிலையில் விவாசயிகள் கரும்புகளை அறுவடை செய்ய தயாராகி வருகின்றனர். அரசின் பொங்கல் தொகுப்பில் கரும்பு வழங்குவதற்கு மட்டும் 71 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு ஒன்றுக்கு 33 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் கரும்புகளை கொள்முதல் செய்யும் வியாபாரிகள் 13 ரூபாய்க்கு கேட்பதாகவும், இடைத்தரகர்களால் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர். அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றனர்.