பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது: இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது: இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி!
பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது: இன்று வழங்குகிறார் முதலமைச்சர் பழனிசாமி!

பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது வழங்கும் நடைமுறையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் 16 லட்சத்து 43 ஆயிரம் விவசாயிகள் வாங்கிய 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் அறிவித்தார். பின்னர் இதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த சில நாட்களாக தேர்தல் பரப்புரையின்போது பேசிய முதல்வர் பழனிசாமி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீது விரைவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று கூறி வந்தார்.


இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று பயிர்க்கடன் தள்ளுபடிக்கான ரசீதை விவசாயிகளுக்கு நேரில் வழங்கி, கடன் தள்ளுபடி திட்டத்தை தொடக்கிவைக்கிறார். 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பயிரிடுவோர் கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், உழவர் பணி கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட வங்கிகளால் வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்கு தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் பயிர்கடன் தள்ளுபடிக்கான வழிகாட்டு நெறிமுறைகளுடன் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பல நோக்கு கூட்டுறவு சங்கங்கள், பயிரிடுவோர் கூட்டுறவு சங்கங்கள், கிராமப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், உழவர் பணி கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட வங்கிகளால் வழங்கப்பட்ட பயிர் கடன்களுக்கு தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்ற நடவடிக்கைகள், நிதி முறைகேடுகளுக்கு உள்ளான இனங்களுக்கு தள்ளுபடி இல்லை எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, பயிர்கடன்களுக்காக அரசிடம் இருந்து ஏதேனும் மானியம் பெற்று இருந்தால், மானியம் போக எஞ்சிய தொகை மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com