\
நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி
Published on

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீட்டை தடுத்து நெல் கொள்முதலை தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், ஆளும் கட்சியினர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் டோக்கன் கொடுக்கும் விவசாயிகளிடம் மட்டும்தான் நெல் கொள்முதல் செய்யவேண்டும் என அதிகாரிகளை மிரட்டுவதாக செய்திகள் வெளியாகி வருவதாக கூறியுள்ளார். பல விவசாயிகள் 20 நாட்கள் காத்திருந்தும் ஆளும் கட்சியினரின் கருணைப் பார்வை இல்லாததால் நெல்லை விறபனை செய்யமுடியாமல் துன்பத்தை அனுபவித்து வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இடைத்தரகர்களை முதலமைச்சர் உடனடியாக கட்டுப்படுத்தி, அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் கொள்முதலை விரைவுபடுத்தவேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com