டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

டெல்டா மாவட்ட தூர்வாரும் பணிகளை இன்று ஆய்வு செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்

மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்து விடப்பட்டுள்ள நிலையில், டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் தூர்வாரும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.இன்று மதியம் 12.30 மணியளவில் திருச்சி வந்தடையும் முதல்வர் மு.க.ஸ்டாலின், புதுக்கோட்டை சென்று தூர்வாரும் பணிகள் மற்றும்
வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்கிறார். நாளை நாகை, மயிலாடுதுறை, தஞ்சை மற்றும் திருவாரூரில் ஆய்வு மேற்கொள்கிறார். டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளும்போது விவசாயிகளை சந்தித்து முதலமைச்சர் கருத்துகளை கேட்க உள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com