பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல்: விவசாயிகள் வரவேற்பு

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல்: விவசாயிகள் வரவேற்பு
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட மசோதா பேரவையில் தாக்கல்: விவசாயிகள் வரவேற்பு

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகைசெய்யும் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என தமிழக முதலமைச்சர் பழனிசாமி சமீபத்தில் தெரிவித்திருந்தார். அறிவிப்பை தமிழக அரசின் கொள்கை முடிவாக அமைச்சரவையில் அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். சென்னை பசுமைவழிச்சாலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், மீத்தேன் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் உள்ளிட்ட‌ 20 க்கும் மேற்பட்ட விவசாயிகள் ‌நன்றி தெரிவித்தனர்.

அதனையடுத்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்க தமிழக அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அறிவிப்பை செயல்படுத்துவதில் உள்ள சட்டச் சிக்கல்கள் குறித்து ஆராய முதலமைச்சர் தலைமையில் குழு அமைப்பது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டடது.

இந்நிலையில், காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வகைசெய்யும் சட்ட மசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காவிரி வேளாண் மண்டல சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்ற முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளின் அமைச்சர்கள், உயரதிகாரிகள் என குழுவில் 30பேர் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com