“துவரை நடவு செய்யுங்கள்” - விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் அழைப்பு

“துவரை நடவு செய்யுங்கள்” - விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் அழைப்பு
“துவரை நடவு செய்யுங்கள்” - விவசாயிகளுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் அழைப்பு

ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் வட்டாரத்தில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. தமிழக அரசு 2500 ரூபாய், தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் 3200 ரூபாய் வழங்குகிறது. விவசாயிகள் துவரை நடவு செய்து பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் ஆகிய வட்டார கிராமங்களில் பருப்பு வகைகள் அதிகளவில் சாகுபடி செய்யபடுகிறது.

இந்தநிலையில், துவரை பருப்பு சாகுபடி பரப்பை அதிகரிக்க தற்போது தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் நடப்பாண்டு துவரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு, ஒரு ஹக்டேருக்கு 2,500 ரூபாய் மானியம் வீதம், 600 ஹக்டேருக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஒரு ஹக்டேருக்கு 3,200 ரூபாய் வீதம் 100 ஹக்டேருக்கு மானியம் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதனால், விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி, துவரை விதைகளை 50 சதவீத மானியத்தில் பெற்று பயனடையலாம் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல துவரை விதைகளை நேரடியாக நடவு செய்யாமல், துவரை நாற்று விட்டு, அந்த நாற்றுக்களை நிழலான பகுதியில் வளர்த்து, நடவு செய்யும் அளவிற்கு வளர்ந்த பின்னர், வயலை நன்றாக உழுது, பாத்திகள் பிடிக்க வேண்டும்.

பின்னர் அந்த பாத்திகளில் உரிய இடைவெளியுடன் நடவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது நேரடியாக விதைப்பதை விட நூறு மடங்கு கூடுதல் மகசூல் கிடைக்கும் என்று வேளாண்மை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளையும் விவசாயிகளுக்கு அதிகாரிகள் செய்து கொடுத்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com