நெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நெல்லுக்கு ஆதார விலை அதிகரிப்பு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Published on

நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 200 ரூபாய் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்பதல் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையின் இன்றைய கூட்டத்தில் உளுந்து உள்ளிட்ட பருப்பு வகைகள், பருத்தி போன்ற 14 வகை கோடை கால அறுவடை பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலையை உயர்த்த ஒப்புதல் தரப்பட்டது. இதன்படி சாதாரண ரக நெல்லுக்கான ஆதார விலை 200 ரூபாய் அதிகரிக்கப்பட்டு 1,750 ரூபாய் ஆக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாயிகள் தாங்கள் விளைபொருளுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை செயலாக்கும் வகையில் மத்திய அமைச்சரவையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனினும் குறைந்த பட்ச ஆதார விலை உயர்வு மூலம் அரசின் உணவு மானிய செலவுகள் 11 ஆயிரம் கோடி ரூபாயாக உயர வாய்ப்புள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com