பாசுமதி நெல்லை பயிரிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் இளம் தலைமுறை விவசாயி

பாசுமதி நெல்லை பயிரிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் இளம் தலைமுறை விவசாயி
பாசுமதி நெல்லை பயிரிட்டு அறுவடைக்காக காத்திருக்கும் இளம் தலைமுறை விவசாயி

வட மாநிலங்களில் மட்டும் விளைவிக்கப்படும் பாசுமதி அரிசியை திருநெல்வேலி மாவட்டத்தில் முதன் முதலாக விதைத்த இளம் தலைமுறை விவசாயி விளைச்சலுக்காக காத்திருக்கிறார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மூலம் கார் சாகுபடி, வடகிழக்கு பருவமழை மூலம் பிசான சாகுபடி என இருபோக விளைச்சல் நடைபெறும். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பாடகசாலை எனும் ஒரு சிறிய விவசாய கிராமத்தில் வட மாநிலங்களில் விளையும் பாசுமதி ரக நெல்லை விதைத்து புது முயற்சியை இளைஞர் ஒருவர் மேற்கொண்டுள்ளனர்.

யார் அந்த விவசாயி?

திருநெல்வேலி மாவட்டம் திருவேங்கடநாதபுரம் அருகே உள்ள பாடகசாலை என்னும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த விவசாயி தங்கராஜ். பிகாம் பட்டதாரியான இவரது மகன் திருநாவுக்கரசு என்பவர், இவர்களது அரை ஏக்கர் நிலத்தில் முதல்முறையாக பாசுமதி ரக நெல்லை பயிரிட்டுள்ளனர் பயிரிட்டு தற்போது 85 நாட்களை ஆன நிலையில், நெல்லும் நல்ல விளைச்சலைக் கண்டிருக்கிறது. இதனால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ள விவசாயி நான் இன்னும் 40 நாட்களில் விளைந்த நெல்லை விற்பனை செய்யும்போது கிடைக்கும் லாபம், கண்டிப்பாக நெல்லை மாவட்டத்தில் மற்ற விவசாயிகளும் லாபகரமான தொழிலாக விவசாயத்தை மாற்ற முடியும் என்றார்.

ஆட்சியரிடம் 'சிறந்த விவசாயி' பரிசு

சமீபத்தில் சுதந்திர தினவிழாவில் நெல்லை மாவட்ட ஆட்சியர் கையால் 'சிறந்த விவசாயி' என பரிசு பெற்றுள்ளார் தங்கராஜ், பழமையான நெல் ரகங்களை இதுவரை விதைத்து அறுவடை செய்து வந்த நாங்கள் இப்போது வட மாநிலங்களில் மட்டுமே விளையும் பாசுமதி ரக நெல்லை எங்கள் சிறு கிராமத்தில் விதைத்துள்ளோம். நல்ல விளைச்சல் தந்திருக்கிறது இன்னும் 40 நாட்களில் அறுவடை முடிந்து விற்பனைக்கு செல்லும் போது மிகப் பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம் என்கிறார் விவசாயி தங்கராஜ்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com