காஞ்சிபுரம்: 8,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்

காஞ்சிபுரம்: 8,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
காஞ்சிபுரம்:  8,000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசம்
காஞ்சிபுரம் மாவட்டம் நெல்வாய் பகுதியில் விவசாயிகளிடமிருந்து இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நெல்வாய் பகுதியில் உள்ள சுற்று வட்டார கிராமங்களில் விவசாயிகளிடம் இருந்து சுமார் 8,000 நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய உரிய பணமும் சென்றடைந்து விட்டது. இந்நிலையில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை உரிய முறையில் பாதுகாக்காமல், அதை நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ள கிடங்குக்கு கொண்டு செல்லாமல் மாதக்கணக்கில் காலம் தாழ்த்தி வந்தனர். இந்நிலையில் தற்போது தொடர் மழை காரணமாக நெல்வாய் பகுதியில் விவசாயிகளிடமிருந்து இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் அனைத்தும் மழையில் நனைந்து வீணாகி உள்ளது.
'லாரி வரவில்லை, சாக்கு கையிருப்பு இல்லை' உள்ளிட்ட காரணங்களை கூறி, கொள்முதல் நிலையங்களில், விவசாயிகள் அலைக்கழிப்பிற்கு ஆளாகின்றனர். அதேநேரத்தில், கமிஷன் ஏஜெண்டுகள், வியாபாரிகள் எடுத்து வரும் நெல் மட்டுமே, உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுகிறது.
கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நனைந்துபோன அனைத்து நெல் மூட்டைகளும், மீண்டும் நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு, அங்கு நெல் மூட்டைகள் அனைத்தையும் காய வைத்து மீண்டும் ரேஷன் கடைக்குத் தான் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த அரிசி முழுவதும் தரமில்லாமல் கெட்டுப்போய் மக்களிடமே திரும்பி வந்து சேர்கிறது.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக செஞ்சி அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்து மாதக்கணக்கில் வைத்திருக்கும் வியாபாரிகளின் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தி புதிதாக கொண்டு வரும் விவசாயிகளுடைய நெல் மூட்டையை வைப்பதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com