விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி - புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்

விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி - புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்
விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி - புதியதலைமுறை கள ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பெரம்பலூர் மாவட்டம் சிறுகுடல் கிராமத்தில் விவசாயிகளிடம் போலி உரம் விற்று மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் பரிந்துரைத்துள்ளதாக வேளாண்மை இணைஇயக்குனர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சிறுகுடல் கிராமத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் அதே ஊரைச் சேர்ந்த இடைத்தரகர் ராமலிங்கம் என்பவரிடம் இருந்து உரத்தை வாங்கி மக்காச்சோளத்திற்கு அடி உரமாக பயன்படுத்தினர். இதனையடுத்து சுமார் 600 ஏக்கர் பரப்பளவிலான மக்காச்சோள பயிர்கள் போதிய வளர்ச்சியின்றி பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக புதிய தலைமுறை நடத்திய கள ஆய்வில் யூரியாவுக்கு பதில் சுண்ணாம்புக்கல் கொடுத்து மோசடி செய்தது அம்பலமானது.

இதனையடுத்து சோளப்பயிர்களை ஆய்வு செய்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் உரத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். திண்டுக்கல்லில் உள்ள அரசு பரிசோதனைக்கூடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் அது போலி உரம்தான் என உறுதியாகியுள்ளது. இதனையடுத்து மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் பரிந்துரைத்துள்ளதாக வேளாண்மை இணைஇயக்குனர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com