75 சதவிகிதம் குறைந்த திருவாரூர் குறுவை சாகுபடி; கேள்விக்குறியாகும் விவசாயம்..!

75 சதவிகிதம் குறைந்த திருவாரூர் குறுவை சாகுபடி; கேள்விக்குறியாகும் விவசாயம்..!
75 சதவிகிதம் குறைந்த திருவாரூர் குறுவை சாகுபடி; கேள்விக்குறியாகும் விவசாயம்..!

உணவு உ‌ற்‌‌பத்தியில் முதலிடம் பிடித்து வந்த திருவாரூர் மாவட்டத்தில், பருவமழை‌ பொய்த்தது, மேட்டூர் அணை தாமதமாக தி‌றக்கப்பட்டது உள்ளிட்ட கா‌ரணங்களால் குறுவை சாகுபடி 75 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தின் நெற்‌களஞ்சியமாக தி‌‌கழும் காவிரி டெல்டா மாவட்டங்க‌‌ளில் ஒன்றான திருவாரூரில் முழுமையாக நெல் சாகுபடி மட்டுமே நடைபெறும். இங்கு 2015-16 ஆண்டில் 18 ஆயிரத்து 500 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. 2016-17 ஆண்டில் அது 6 ஆயிரம் ஹெக்டேராக குறைந்தது. 2015-16 ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 310 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் 2016-17 ஆம் ஆண்டில் தற்போது வரை 8 ஆயிரத்து 400 ஹெக்டேர் மட்டுமே‌‌ சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 75 சதவீதம் குறைவாகும்.

குறுவை சாகுபடியின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் திருவாரூர் மாவட்டத்தின் நிலத்தடி நீர்மட்டம்‌ ‌முன்பு‌ இருந்ததைவிட 2‌0 அடி குறைந்தது தான் என்கிறது மாவட்ட நிர்வாகம். ஜூன் 12 ஆம்தேதி திறக்கப்பட‌ வேண்டிய‌ மேட்டூர் அணை நீர் தாமதமாக திறக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவு என்கின்றன‌ர் திருவாரூர் மாவட்ட விவசாயிகள். இப்ப‌டி வறட்சி‌‌, காவிரி நீர் பிரச்னை ஆகிய கார‌ணங்களால் உணவு உற்பத்தி 80 சதவிகிதம் பாதிக்‌கப்படும் என அச்சம் தெரிவிக்கும் விவசாயிகள், திருவாரூர் மாவட்டத்தில் எதிர்காலத்தில் விவசாயமே கேள்விக்குறியாகும் சூழல் ஏற்பட்டிருப்பதாகவும் கவலை கொள்கின்றனர். விவசாயத்தை காக்க‌ தண்ணீர் கிடைப்பதற்கான‌ உத்தரவாதத்தை அரசு வழங்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டகளான திருவாரூர், நாகை மாவட்டங்கள் தமிழகத்தின் நெற்களஞ்சியங்களாகத் திகழ்ந்துவருகின்றன. இதில் திருவாரூர் மாவட்டம் உணவு உற்பத்தியில் முதன்மை இடம் பிடித்துவருகிறது. இதற்குக் காரணம் விவசாயிகள் முழுமையாக நெல் சாகுபடியை மட்டுமே செய்து வருகின்றனர். இதற்கு மண்வளம் உள்பட பல காரணங்கள் உள்ளன. காவிரி நீரையும், பருவ மழையையும் நம்பிதான் சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் குறுவை, சம்பா மட்டுமின்றி கோடை சாகுபடி என முப்போகம் விளைந்த பூமியாக இருந்துவந்தது. ஆனால் காலபோக்கில் காவிரிநீர் பிரச்னை, இயற்கை ஒத்துழைப்பு தராததால் வறட்சி, வெள்ளம் போன்ற பாதிப்புகளால் சாகுபடி பாதிக்கப்பட்டுவந்தது. இந்த நிலையில் கர்நாடகாவில் சாகுபடி பரப்பளவு கூடியதால் தண்ணீர் தேவை அதிகரிக்க அதற்கு தேவையான கட்டமைப்புகளை அந்த அரசு உருவாக்கியது. இதனால் தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்தது.

இதனால் ஜீன் 12 ஆம் தேதி திறக்கப்படும் மேட்டூர் அணை உரிய தண்ணீர் இல்லததால் காலம் கடந்து திறக்க வேண்டிய சூழ்நிலை உருவானது. இதனால் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டு, அதன் பரபரப்பளவு குறைந்தது. காலம் கடந்தாலும் குறுவையில் விட்ட சாகுபடியை சம்பாவில் சேர்த்து செய்கின்ற நிலை இருந்துவந்தது. ஆனால் அதுவும் காலப்போக்கில் போதிய தண்ணீர் இல்லாததால் எதிர்பார்த்த அளவு சாகுபடியை மேற்கொள்ள முடியாமால் போனது.

திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஒரு லட்சத்து 75 அயிரம் ஏக்கர் குறுவை சாகுபடியும், 3 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடியும் நடைபெற்றுவந்தது. இந்த ஆண்டு கர்நாடக அரசு தண்ணீர் தரததால் மேட்டூர் அணையில் தண்ணீர் எந்த ஆண்டும் இல்லாதவகையில் பாதாளத்திற்கு சென்றது. பருவமழையும் பொய்த்துபோனதால் ஏரி, குளம் நீர் நிலைகள் வறண்டுபோனது. இந்த நிலையில் நிலத்தடி நீரை நம்பி பம்புசெட்டுகள் மூலம் குறுவை சாகுபடியை விவசாயிகள் தொடங்கினர்.

2015-16 ஆண்டில் 18 ஆயிரத்து 500 ஹெக்டேரில் கோடை நெல் சாகுபடி நடைபெற்றது. 2016-17 ஆண்டில் 6 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்தது. இது கடந்த ஆண்டை விட மூன்றில் ஒரு பங்காக சாகுபடி குறைந்துள்ளது. இதேபோல 2015-16 ஆண்டில் 30 ஆயிரத்து 310 ஹெக்டேர் பரப்பளவில் குறுவை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் 2016-17 ஆண்டில் தற்போதுவரை 8 ஆயிரத்து 400 எக்டேர் மட்டுமே சாகுபடி நடந்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட 75 சதவீதம் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் திருவாரூர் மாவட்டத்தில் 20 அடிக்குமேல் நிலத்தடிநீர் மட்டம் குறைந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டைவிட 80 சதவீதம் உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டும் கோடை மற்றும் குறுவை சாகுபடி குறைந்துள்ள நிலையில் உணவு உற்பத்தி பெரிய அளவில் பாதிக்கப்படும் என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். இனி வரும் காலங்களில் விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால் தண்ணீரைப் பெற்றுத் தருவதற்கான உத்தரவாதத்தை அரசு வழங்கிட வேண்டும். இல்லையென்றால் நெற்களஞ்சியமாகத் திகழும் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் என்பது கேள்விக்குறியாகும் நிலை ஏற்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com