முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுய்க்கின் 111வது நினைவு நாள் - விவசாயிகள் அஞ்சலி

முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுய்க்கின் 111வது நினைவு நாள் - விவசாயிகள் அஞ்சலி
முல்லைப்பெரியாறு அணை கட்டிய பென்னிகுய்க்கின்  111வது நினைவு நாள் - விவசாயிகள் அஞ்சலி

முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுய்க்கின்  111-வது நினைவு நாளான இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் உள்ள அவரது மணிமண்டபத்தில் விவசாயிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு நீர் ஆதாரமாக விளங்குவது முல்லைப் பெரியாறு அணை. இந்த அணையைக் கட்டிய ஆங்கிலேயப் பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக்கை தென் தமிழக மக்கள் மனித கடவுளாக பாவித்து அவரை வணங்கி வருகின்றனர்.



கர்னல் ஜான் பென்னிகுய்க் அவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினத்தை தென்தமிழக மக்கள் வெகு விமரிசையாக அனுசரித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கர்னல் ஜான் பென்னி குய்க்அவர்களின் 111- வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இதனை அடுத்து பாரதிய கிசான் சங்கம, ஐந்து மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாய சங்கம், முல்லைச்சாரல் விவசாய சங்கத்தினர் மற்றும் கூடலூர் பகுதி விவசாயிகள் உள்ளிட்ட ஏராளமானோர் லோயர்கேம்ப்பில் அமைந்துள்ள கர்னல் ஜான் பென்னிகுய்க்கின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.



மேலும் இதுகுறித்து விவசாய சங்கத்தினர் கூறுகையில், "முல்லைப் பெரியாறு அணையில் வறட்சியான காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டு முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னி குய்க் அவர்களின் நினைவு தினத்தை இன்று அனுசரிக்கின்றோம். இதற்கிடையே தற்போது மீண்டும் தமிழகத்தின் தென் மாவட்டங்களை பாலைவனமாக்கும் முயற்சியில் கேரள அரசு இறங்கியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டுவோம் என்ற முழக்கத்தை கேரளாவில் முன்னெடுத்துள்ளனர். இதனை முற்றிலும் தமிழக விவசாயிகள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

அதே போன்று லோயர்கேம்ப் பகுதியில் இருந்து மதுரைக்கு ராட்சச குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்தை அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். லோயர் கேம்பில் இருந்து ராட்சத குழாய் மூலம் தண்ணீர் கொண்டு சென்றால் தேனி மாவட்டம் முழுவதும் பாலைவனமாக மாறிவிடும். எனவே வைகை அணையை தூர்வாரி எப்போதும் போல் தண்ணீரை மதுரைக்கு கொண்டு செல்லலாம். எனவே தமிழக அரசு இதனை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com