“ஒட்டுமொத்த தேச நம்பிக்கையும் மேற்கு வங்க வாக்காளர்கள் கைகளில்தான் உள்ளது”- ப.சிதம்பரம்

“ஒட்டுமொத்த தேச நம்பிக்கையும் மேற்கு வங்க வாக்காளர்கள் கைகளில்தான் உள்ளது”- ப.சிதம்பரம்
“ஒட்டுமொத்த தேச நம்பிக்கையும் மேற்கு வங்க வாக்காளர்கள் கைகளில்தான் உள்ளது”- ப.சிதம்பரம்

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் அதிகரித்துள்ள நிலையில் ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையும் மேற்கு வங்காள வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம். வியாழன் அன்று மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 

“நாட்டின் மீது விழுந்துள்ள மருத்துவ அவசர நிலை மற்றும் சுகாதார பேரழிவுக்கு முழுமுதற் காரணம் மத்தியில் ஆளும் பாஜகதான். ஒட்டுமொத்த தேசத்தின் நம்பிக்கையும் மேற்கு வங்காள வாக்காளர்களின் கைகளில்தான் உள்ளது. வாக்காளர்கள் தேச மக்களின் குரலை பிரதிபலிக்க செய்யும் வாய்ப்பை இந்த ஆறாம் கட்ட தேர்தலில் பெற்றுள்ளனர். 

கடந்த ஏப்ரல் 2020க்கும் இப்போதைக்கும் ஏதேனும் மாற்றம் அடைந்துள்ளதா? அப்படி ஏதேனும் இருந்தால் அந்த நிலைமை முன்பை விட மிக மோசம் என்று தான் இருக்கும். புலம் பெயர் மக்கள் நீண்ட வரிசையில் ரயில் நிலைய வளாகத்தில் காத்திருப்பதை தொலைக்காட்சியில் பார்த்து நெஞ்சம் வலிக்கிறது. ஆனால் ரயில்வே துறை அமைச்சர் ரயில் நிலையங்களில் கூட்டமே இல்லை என்கிறார். 

சுகாதாரத்துறை அமைச்சர் மருந்துகளுக்கு தட்டுப்பாடு இல்லை என்கிறார். அப்படி என்றால் இங்கு நோயாளிகளுக்கு பற்றாக்குறையா?” எனக் கேள்வி எழுப்பி உள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com