வாக்குப்பதிவு: சென்னையில் பெண்களை முந்திய ஆண்கள்!

வாக்குப்பதிவு: சென்னையில் பெண்களை முந்திய ஆண்கள்!
வாக்குப்பதிவு: சென்னையில் பெண்களை முந்திய ஆண்கள்!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் ஆண்களே அதிகளவு வாக்குகளை பதிவு செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாவட்ட தேர்தல் அலுவலகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதில், சென்னைக்குட்பட்ட 16 தொகுதிகளில் ஆண்கள் 60.83 % அளவிற்கு வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆனால் பெண்கள் 57.44% அளவிற்கே வாக்குகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த 16 தொகுதிகளிலும் 12,13,000 ஆண் வாக்காளர்களும், 11,84,000 பெண் வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் அதிகபட்சமாக 72.34% ஆண் வாக்காளர்களும், 69.76% அளவிற்கு பெண் வாக்காளர்களும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். அதேநேரம், வேளச்சேரி தொகுதியில் குறைந்த அளவாக 57.06% ஆண்களே தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் 62.17% ஆண்கள் வாக்களித்துள்ள நிலையில், 54.8% சதவிகித பெண்களே தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ளனர்.

இந்தத் தொகுதியில் பெண் வாக்காளர்களை விட ஆண் வாக்காளர்கள் 7 சதவிகிதம் கூடுதலாக வாக்கினை பதிவு செய்துள்ளனர். சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்ததில் ஆண்கள், பெண்கள் இடையேயான வித்தியாசம் சுமார் 3 சதவிகிதம் அளவிற்கே இருந்ததாக சென்னை தேர்தல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com