வாக்குப்பதிவுக்கும் முடிவுக்குமான இடைவெளி: கடந்த காலங்களில் எப்படி?

வாக்குப்பதிவுக்கும் முடிவுக்குமான இடைவெளி: கடந்த காலங்களில் எப்படி?

வாக்குப்பதிவுக்கும் முடிவுக்குமான இடைவெளி: கடந்த காலங்களில் எப்படி?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், 25-ஆவது நாளில்தான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இத்தனை காலம் இடைவெளி இந்தமுறைதானா, கடந்த காலங்களில் எப்படி இருந்தது? - ஒரு பார்வை...

  • 1996 ஆம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் அந்த ஆண்டு மே 2 ஆம் தேதி நடந்தது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் 10 நாள்கள் கழித்து மே 12 ஆம்தேதி வெளியிடப்பட்டது.
  • 2001 ஆம் ஆண்டு தேர்தல் மே 10 ஆம் தேதி நடத்தப்பட்டநிலையில், மே 13 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிவு அறிவிக்கப்பட்டது.
  • 2006 ஆம் ஆண்டுக்கான தேர்தல் மே 8 ஆம் தேதி நடத்தப்பட்டது. 3-ஆவது நாளிலேயே அதாவது மே 11 ஆம் தேதியே வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
  • 2011 தேர்தலில் வாக்குப்பதிவுக்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் ஒருமாதம் இடைவெளி இருந்தது. அந்தத் தேர்தலில் ஏப்ரல் 13 ஆம்தேதி வாக்குப்பதிவு நடந்த நிலையில், மே 13 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
  • 2016 தேர்தலில், மே 16 ஆம்தேதி தேர்தல் நடந்தநிலையில், 3 நாட்களில் அதாவது மே 19 ஆம் தேதியே முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
  • 2021 தேர்தலில், ஏப்ரல் 6 ஆம்தேதி தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் 25 ஆவது நாளான மே 2 ஆம்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

வழக்கமாக மேற்குவங்கத்தேர்தலின் கடைசி கட்டத் தேர்தலோடு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், இந்தமுறை அதில் மாற்றம் செய்யப்பட்டதுதான் நீண்ட இடைவெளிக்கு காரணமாகிவிட்டது.

பிளஸ் டூ பொதுத்தேர்வுகள், தமிழ்ப் புத்தாண்டு, கோடைக்காலம் போன்ற காரணங்களால் ஏப்ரல் 6 ஆம்தேதி தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5 மாநிலங்களில் நடத்தும் தேர்தலில் ஒரு மாநிலத்தின் தேர்தல் முடிவுகள் முன்கூட்டியே வெளியானால் அது மற்ற மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்ற காரணமும் சொல்லப்படுகிறது.

குறிப்பாக, தேர்தலுக்கான பாதுகாப்பில் ஈடுபடும் துணை ராணுவப்படையினர் பயன்பாடும் இந்த இடைவெளிக்கான காரணமாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com