கோவையில் பாஜக சின்னமான தாமரை முத்திரையை வாக்குப்பதிவின் போது கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் வானதி ஸ்ரீனிவாசன் அணிந்திருந்தது தேர்தல் விதிமீறல் என திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி வாக்குப்பதிவு நாளன்று கட்சி சார்ந்த சின்னம், முத்திரை என எந்தவித அடையாளத்தையும் வாக்குச்சாவடிக்குள் அணியவோ, எடுத்து செல்லவோ கூடாது என சொல்லியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவைக்கு அனுப்பப்பட்ட கடித்தத்தில் இதை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரும், பாஜக தேசிய மகளிரணி தலைவியுமான வானதி ஸ்ரீனிவாசன் கோவை டாடாபாத் பகுதியில் வாக்களிக்க வந்தபோது, பாஜக சின்னமான தாமரை முத்திரையை தனது புடவையில் குத்தி வந்திருந்தார். இது தேர்தல் விதிமீறல் என திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இதை சுட்டிக்காட்டி மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.
Loading More post
தொலைதூர பயணத்தில் இரவு ஊரடங்கு நேரத்தை அணுகுவது எப்படி? - ஓர் எளிய வழிகாட்டுதல்
பஞ்சாப் அணியை 120 ரன்களில் கட்டுப்படுத்தியது ஹைதராபாத்!
கொரோனா விதிமீறும் மக்களை நெறிப்படுத்தும் கர்ப்பிணி டிஎஸ்பி ஷில்பா - வைரலாகும் வீடியோ
மன்சூர் அலிகான் முன் ஜாமீன் மனு தள்ளுபடி - புதிய மனுவை தாக்கல் செய்ய உத்தரவு
சி.ஏ. படிப்புக்கான அடிப்படைத் தேர்வுக்கு இப்போதே விண்ணப்பிக்கலாம்
கோவாக்ஸின் - கோவிஷீல்டு இடையேயான வேறுபாடு என்ன? - சந்தேகங்களும், மருத்துவர் விளக்கங்களும்!
’ஒடுக்குமுறை எந்த விதத்தில் இருந்தாலும் எதிர்க்க வேண்டும்”- நடிகை லட்சுமி சிறப்பு பேட்டி!
மேற்கு வங்க தேர்தல் களம்: பாஜகவுக்கு எதிரான மம்தாவின் புதிய ஆயுதமா 'கொரோனா 2-ம் அலை'?
"கொரோனா அல்ல... பசிதான் பயம்!" - எந்த அரசையும் நம்பாத புலம்பெயர் தொழிலாளர்கள்