ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான படிக்கட்டில் ஏறிய போது சறுக்கி விழுந்த அமெரிக்க அதிபர் பைடன்!

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான படிக்கட்டில் ஏறிய போது சறுக்கி விழுந்த அமெரிக்க அதிபர் பைடன்!

ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான படிக்கட்டில் ஏறிய போது சறுக்கி விழுந்த அமெரிக்க அதிபர் பைடன்!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமான படிக்கட்டில் ஏறிய போது சறுக்கி விழுந்துள்ளார். ஒன்றுக்கும் மேற்பட்ட முறை தடுமாறிய அவர் இறுதியாக படிக்கட்டில் ஏறிய போது சறுக்கி விழுந்துள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. 

சுமார் 30 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் படிக்கட்டுகளில் ஏற தடுமாறிய அதிபர் பைடன், மேல் தளத்திற்கு சென்றதும் புன்னகைத்த படி திரும்பி நின்று தனக்கு பாதுகாப்பு அளித்த அதிகாரிகளுக்கு ‘ராயல் சல்யூட்’ அடித்து விட்டு விமானத்திற்குள் நுழைகிறார். 

‘அதிபர் நலமுடன் இருக்கிறார். வெளிப்புறத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. மிக மிக அதிகமாக இருந்தது’ என வெள்ளை மாளிகை தரப்பு தெரிவித்துள்ளது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் அமெரிக்க அதிபர் பறக்க பயன்படுத்தும் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நகரும் வெள்ளை மாளிகை எனவும் சொல்லலாம். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com