கமல் கட்சியை கலாய்த்த சுமந்த்.சி.ராமன்... நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

கமல் கட்சியை கலாய்த்த சுமந்த்.சி.ராமன்... நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!
கமல் கட்சியை கலாய்த்த சுமந்த்.சி.ராமன்... நெட்டிசன்கள் கடும் விமர்சனம்!

வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் களம் காண்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நிறுவப்பட்ட இந்த அரசியல் கட்சி முதல்முறையாக சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்கிறது. சமத்துவ மக்கள் கட்சி மற்றும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை சந்திக்கிறது மக்கள் நீதி மய்யம். கூட்டணி கட்சிகள் இரண்டிற்கும் தலா 40 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது மக்கள் நீதி மய்யம். 

இந்நிலையில், அரசியல் விமர்சகரான சுமந்த். சி. ராமன் மக்கள் நீதி மய்யம் கட்சி கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டை ‘வாட்ஸப் ஃபார்வர்டு மெசேஜ்’ ஒன்றை மேற்கோள்காட்டி ட்விட்டரில் கலாய்த்துள்ளார். 

“உங்களுக்கு செய்தி தெரியுமா? மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்திற்கு உணவு டெலிவரி செய்ய சென்ற ஸ்விகி டெலிவரி ஊழியருக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளனவாம்” - இது வாட்ஸ் அப்பில் வந்த ஃபார்வேர்டு மெசேஜ் என சிரிக்கும் ஸ்மையிலியுடன் ட்வீட் செய்துள்ளார் சுமந்த். சி. ராமன். 

இந்த ட்வீட்டுக்கு நெட்டிசன்கள் வெவ்வேறு விதமாக ரியாக்ட் செய்து வருகின்றனர்.

’நேர்மையான கட்சியை ஆதரிக்க வேண்டாம். ஆனால், ஏளனம் செய்யக்கூடாது!’

“இப்படி பதிவதற்கு வெட்கமாக இல்லை! ஊழல் இல்லாத, பொருளாதாரத்தில் தமிழகம் சிறந்து விளங்க, பெண்கள் பாதுகாப்பு சிறந்திட, விவாசய தொழில் சிறந்திட என அனைத்திலும் தமிழகத்தை சீரமைக்க பாடுபடும் ஒரு நேர்மையான கட்சியை ஆதரிக்க வேண்டாம்; ஏளனம் செய்யக்கூடாது என்கிற காமன்சென்ஸ் கூட இல்லாமல்போனதே உங்களுக்கு!” என்று பாலமுருகன் என்பவர் ரியாக்ட் செய்துள்ளார்.  

’படித்தவருக்கு சீட் கொடுப்பதில் தப்பில்லை’

“தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் தகுதி, ஸ்விகி டெலிவரி ஊழியரிடம் இருந்தால் அவருக்கு சீட் கொடுப்பதில் தப்பில்லை. குறைந்தபட்சம் இதன் மூலம் படிப்பறிவில்லாத ஒருவரை அமைச்சராக பெறாமல் இருப்போம். ஸ்விகி பாய்ஸ் எல்லோரும் படித்தவர்கள்” என்று மற்றொருவர் ட்வீட் செய்துள்ளார். 

எங்களது நம்பிக்கை ஒளி டார்ச்லைட்

“என்னவொரு காமெடி. ஓர் இளம் துடிப்புமிக்க இளைஞர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதில் என்ன தப்பு இருக்கு டாக்டர்? உங்களை போன்ற ஆட்களால் தான் நமது மாநிலம் முன்னேற்றப்பாதைக்கு செல்வது தடைபடுகிறது. எங்களது நம்பிக்கை ஒளி டார்ச்லைட் தான்” என ஒருவர் ட்வீட் செய்துள்ளார். 

இது உண்மை தான்!

அவர் சொல்வது உண்மை தான். அந்த செய்தி ஃபார்வேர்டு மெசேஜாக தான் வந்தது என்பதை தெளிவுப்படுத்தும் விதமாக ஒரு பயனர் ட்வீட் செய்திருந்தார். 

இது போல மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ஆதரவாகவும், சுமந்த். சி. ராமனின் கருத்தை விமர்சித்தும் ட்வீட்டுகளும், ரியாக்‌ஷன்களும் பதிவாகியுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com