கமல்ஹாசனை காப்பி அடித்துவிட்டாரா ஸ்டாலின்? - நெட்டிசன்கள் பதிவு

கமல்ஹாசனை காப்பி அடித்துவிட்டாரா ஸ்டாலின்? - நெட்டிசன்கள் பதிவு
கமல்ஹாசனை காப்பி அடித்துவிட்டாரா  ஸ்டாலின்? - நெட்டிசன்கள் பதிவு

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களம் சூடுபிடித்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா என்ற மிகப்பெரிய இரண்டு ஆளுமைகள் இல்லாத முதல் சட்டப்பேரவைத் தேர்தல் இது. ஆளும் கட்சியான அதிமுக ஆட்சியை தக்கவைக்கவும், திமுக ஆட்சி அமைக்கவும், மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வரவு முயற்சித்து வருகின்றன. 

இந்நிலையில், திருச்சியில் நடந்த திமுக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், ஆட்சிக்கு வந்தால் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்  ரூ.1000 உரிமைத் தொகை கொடுக்கப்படும் என அறிவித்திருந்தார். அது தற்போது விவாதப்பொருளாகி உள்ளது. 

சில நாட்களுக்கு முன்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், இல்லத்தரசிகளுக்கு மாத ஊதியம் அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார்.  

“என்னுடைய திட்டத்தை ஸ்டாலின் காப்பி அடித்துவிட்டார்” என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக நெட்டிசன்கள் சிலரும் சமூக வலைதளங்களில் விமர்சங்களை தங்களது பதிவுகளின் மூலமாக முன்வைத்துள்ளனர். 

நீங்க டைரக்டர் அட்லி B-team ah இருப்பீங்க போலயே!

நேர்மையை காப்பி அடிக்க முடியுமா தலைவரே?

கமல்ஹாசனே இந்த திட்டத்தை காங்கிரஸ் இடமிருந்துதான் காப்பி அடித்துள்ளார்?

“இப்படி சொல்வது தவறு. இந்த திட்டத்தை கமல்ஹாசன் 2012 காங்கிரஸ் ஆட்சியின் போது பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் இந்த திட்டத்தை முன்னெடுத்தது. அதனை கருணாநிதி வரவேற்றிருந்தார். அதனால் இதை காப்பி அடித்தது ஸ்டாலின் என சொல்வது தவறு. கமல்ஹாசன் என்பது தான் சரி” என நெட்டிசன் ஒருவர் பதிவிட்டுள்ளார். 

கமல்ஹாசனின் சீன வெர்ஷன்தான் ஸ்டாலின்

நடிகர் கமலின் சீன வெர்ஷன்தான் மு.க. ஸ்டாலின். அவர் முன்னெடுக்கும் ஒவ்வொரு திட்டங்களையும் ஸ்டாலின் காப்பி அடிப்பார். அவரது பிரசாரத்தில் தனித்துவம் என்பது இல்லை” என நெட்டிசன் ஒருவர் தெரிவித்துள்ளார். 

முதலில் கிராம சபை… இப்போது இல்லத்தரசிகளுக்கு ஊதியம்!

“ஸ்டாலின் முதலில் கமல்ஹாசனின் கிராம சபையை காப்பி செய்திருந்தார். இப்போது இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் திட்டத்தையும் காப்பி செய்துள்ளார். அவ்வளவு தான்” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

“நல்ல யாரு சொன்னா என்ன?”, “சொல்றத செய்யுறது தான் முக்கியம்” என்பது மாதிரியான பதிவுகளும் உலவுகின்றன. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com