யாரு சாமி நீங்கெல்லாம்? - போஸ்டரில் புகுந்து விளையாடும் மதுரைவாசிகள்!

யாரு சாமி நீங்கெல்லாம்? - போஸ்டரில் புகுந்து விளையாடும் மதுரைவாசிகள்!
யாரு சாமி நீங்கெல்லாம்? - போஸ்டரில் புகுந்து விளையாடும் மதுரைவாசிகள்!

யாரு சாமி நீங்கெல்லாம் என்று கேட்கும் அளவுக்கு போஸ்டரில் புகுந்து விளையாடுகின்றனர் மதுரைவாசிகள். குறிப்பாக அரசியல் போஸ்டர்கள் மதுரையில் களைகட்டுகின்றன.

தூங்காநகரமான மதுரை போஸ்டருக்கும் பிரபலமாகி வருகிறது. நடிகர்கள் அரசியல் கட்சி தலைவர்கள் என மதுரைவாசிகள் அடிக்கும் போஸ்டருக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. யாரு சாமி நீங்கெல்லாம் என்று கேட்கும் அளவுக்கு போஸ்டரில் புகுந்து விளையாடுகின்றனர் மதுரைவாசிகள். குறிப்பாக அரசியல் போஸ்டர்கள் மதுரையில் களைகட்டுகின்றன. சமீபத்தில் அரசியல் பேச்சுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்த ரஜினிகாந்துக்கு மதுரையில் அடிக்கப்பட்ட போஸ்டர்கள் ஏராளம். ஆனாலும் அறிக்கை வெளியிட்டு அமைதியாய் ஒதுக்கினார் ரஜினிகாந்த். ரஜினியின் மறுப்புக்கும் பிறகும் மதுரையில் போஸ்டர்கள் தொடர்ந்தன. அது விஜய்க்கு.

ரஜினியின் லட்சியத்தை விஜய் நிறைவேற்றுவார் என அவரது ரசிகர்கள் மதுரை முழுவதும் போஸ்டர் ஒட்டினர். ''வேண்டாம் 2026 ல் இல்லைன்னா எப்பவுமே இல்லை 'நீங்க வாங்க தம்பி இனி..' என விஜய்யிடம் ரஜினி கூறுவதுபோல தலைப்பிடப்பட்டுள்ளது. 'அதிசயமும் அற்புதமும் உங்களால் மட்டுமே சாத்தியம் ரஜினி சார்...,' என்று துவங்கின அந்த வாசகங்கள். இன்னும் ஒரு படி மேலே போன விஜய் ரசிகர்கள் அமெரிக்காவை இழுத்தனர். 'தளபதி வந்தால் தமிழ்நாடு அமெரிக்கா' என்ற வாசகங்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் நடிகர் விஜய் இருப்பதுபோல் மதுரை மாநகர் முழுவதும் விஜய் ரசிகர்கள் போஸ்டர் ஒட்டி கவனம் பெற்றனர்.

இப்படி அரசியல் வருகைக்கு விஜய் ரசிகர்கள் காத்துக்கிடந்து போஸ்டர் அடிக்க, ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வரும் தேர்தலை கணக்கிட்டு போஸ்டரை ஓட்டுகின்றனர். திமுக சார்பில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டர் எய்ம்ஸ் மருத்துவமனையை தேடியது. மதுரையில் பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டு தொடங்கி வைக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை கண்டுபிடித்து கொடுத்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் என மதுரை நகரில் போஸ்டர் ஒட்டப்பட்டது.

'எங்கய்யா எய்ம்ஸ்?' என்ற வாசகத்துடன் பிரதமர் மோடி கலந்துகொண்ட அடிக்கல்நாட்டு விழாவின் புகைப்படத்துடன் அந்த போஸ்டர் ஒட்டப்பட்டு கவனம் பெற்றது. மக்களின் கவனத்தை பெறவும், வித்தியாசத்தை கடைபிடிக்கவும் மதுரை மக்கள் போஸ்டர் கலாசாரத்தை கையில் எடுத்துள்ளனர்.ஒட்டப்படும் இடத்தில் பேசுபொருளாகி கவனிக்கப்படுகிறதோ? இல்லையோ? இணையத்தில் ஒரு ரவுண்ட் வந்து விடுகிறது மதுரை போஸ்டர்கள்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com