“அதுதான் நீங்கள்”- திருமண நாளில் நெகிழ்ச்சி பதிவிட்ட குஷ்பு...!

“அதுதான் நீங்கள்”- திருமண நாளில் நெகிழ்ச்சி பதிவிட்ட குஷ்பு...!

“அதுதான் நீங்கள்”- திருமண நாளில் நெகிழ்ச்சி பதிவிட்ட குஷ்பு...!
Published on

தன்னுடைய திருமணநாள் குறித்த நெகிழ்ச்சியான பதிவொன்றை ட்வீட் செய்திருக்கிறார் குஷ்பு.

1995-ல் உருவான திரைப்படம் முறைமாமன். சுந்தர்.சி இயக்கிய இப்படத்தில் குஷ்பு, ஜெயராம், கவுண்டமணி, மனோரமா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அப்படத்தை இயக்கியபோது குஷ்புவிற்கும் சுந்தர்.சி-க்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் கழித்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இன்று குஷ்பு சுந்தர்.சி தம்பதிக்கு 20-வது திருமண நாள்.

இந்நாளை நினைவுகூர்ந்து குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அதில் “இன்றோடு நமக்கு திருமணமாகி 20 வருடங்கள் ஆகின்றன. இந்த 20 வருடத்தில் எதுவுமே மாறவில்லை. நான் பேசிக் கொண்டே இருக்கிறேன். சிறிய புன்னகையுடன் தலையசைத்து நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறீர்கள். அநேகமாக தன்னுடைய கல்யாணத்திற்கே தாமதமாக வந்த ஒரே மணமகன் நீங்களாகத்தான் இருப்பீர்கள். அதுதான் நீங்கள். இந்த இருபது வருடங்களில் நாம் இருவரும் இணைந்து எத்தனையோ புயல் மழையினை கடந்திருக்கிறோம். இன்ப துன்பங்களை கடந்திருக்கிறோம். ஒரு அன்பான குடும்பத்தை நாம் உருவாக்கியிருக்கிறோம். இதற்காக நான் பெருமைப்படுகிறேன். நீங்கள் தான் என் பலம்.” என அன்பும் நெகிழ்ச்சியும் பொங்க பதிவிட்டுள்ளார்.

இன்னும் பல தசாப்தங்கள் இதே மகிழ்ச்சியுடன் திருமண நாளைக் கொண்டாட குஷ்பு, சுந்தர்.சி’ஐ நாமும் வாழ்த்துவோம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com