என்.ஆர். காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை: புதுச்சேரி பாஜக விளக்கம்

என்.ஆர். காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை: புதுச்சேரி பாஜக விளக்கம்
என்.ஆர். காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுக்கவில்லை: புதுச்சேரி பாஜக விளக்கம்

கூட்டணிக்கு வருமாறு என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை என புதுச்சேரி பாஜக தலைவர் தெரிவித்தார்.

புதுச்சேரியில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. இதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்கு வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


இந்நிலையில், புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும் என்று பாஜகவின் கூறி வருகின்றனர். இதனால், பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து வந்த என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி அதிருப்தியில் இருக்கிறார்.

ரங்கசாமிக்கு பாஜக அழுத்தம் தருவதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள புதுச்சேரி பாஜக தலைவர் சாமிநாதன், "கூட்டணிக்கு வருமாறு என்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவில்லை. ஆனால், மாநில நலன் கருதி ரங்கசாமி நல்ல முடிவு எடுத்து எங்கள் கூட்டணிக்கு வருவார் என்று நம்புகிறோம்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com