துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்

துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்
துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கம் வென்ற நடிகர் அஜித்! கொண்டாடி தீர்க்கும் நெட்டிசன்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் அஜித். நடிப்பையும் கடந்து கார் ரேஸிங், பைக் ரேஸிங், சைக்கிளிங், சிறிய ரக டிரான் பறக்க விடுவது என கலவையாக பலவித விஷயங்களில் கவனம் செலுத்தி வருபவர். இந்நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 

46-வது தமிழ்நாடு மாநில ஷூட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை ரைபிள் கிளப் சார்பில் பங்கேற்ற அஜித் மொத்தமாக ஆறு பதக்கங்களை வென்றுள்ளார்.  

10 மீட்டர் ரைபிள் பிரிவில், ரசிகர்களால் செல்லமாக தல என அழைக்கப்படும் நடிகர் அஜித்தின் வெற்றியை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதுகுறித்த செய்திகளும், படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. 

சென்டர் ஃபயர் பிஸ்டல் .32  (ISSF) 25 மீட்டர் குழு பிரிவில் வெள்ளி, சென்டர் ஃபயர் பிஸ்டல் .32  (NR) 25 மீட்டர் குழு பிரிவில் தங்கம், ஸ்டேண்டர்ட் பிஸ்டலில் .22 (ISSF) 25 மீட்டர் குழுவில் தங்கம், ஸ்டேண்டர்ட் பிஸ்டலில் .22 (NR) 25 மீட்டர் குழுவில் வெள்ளி, ப்ரீ பிஸ்டல் .22 (NR) 50 மீட்டர் குழுவில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார் அஜித். 

அஜித் போடியத்தின் மீது ஏறி தங்கப்பதக்கம் வெல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com