ஒருசில பந்துகள் தாக்குப்பிடிக்க முடியாதா? - டெயில் எண்டர்களை விமர்சித்த வாஷிங்டன் தந்தை

ஒருசில பந்துகள் தாக்குப்பிடிக்க முடியாதா? - டெயில் எண்டர்களை விமர்சித்த வாஷிங்டன் தந்தை
ஒருசில பந்துகள் தாக்குப்பிடிக்க முடியாதா? - டெயில் எண்டர்களை விமர்சித்த வாஷிங்டன் தந்தை

வாஷிங்டன் சுந்தர் துரதிர்ஷ்டவசமாக சத வாய்ப்பை இழந்ததைக் குறித்து அவரது தந்தை சுந்தர் டெயில் எண்டர்களை விமர்சித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் இந்த டெஸ்ட் தொடரைக் கைப்பற்றி கெத்து காட்டியுள்ளது இந்திய அணி. இந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணி பேட்டிங் செய்தபோது 96 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதில் இவர் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் என்று ரசிகர்கள் அதிக ஆர்வமுடன் காத்திருந்த போது, எதிர்முனையில் இருந்த இஷாந்த் ஷர்மா மற்றும் சிராஜ் ஆகியோரை அவுட்டாக்கி இவரை சதத்தை பூர்த்தி செய்ய விடாமல் தடுத்து விட்டார் இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் போட்டிக்குப் பின் பேசிய வாஷிங்டன் சுந்தர் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்யாதது வருத்தம் அளிக்கவில்லை என்று குறிப்பிட்டார்.  

இந்நிலையில், வாஷிங்டன் சுந்தர் துரதிர்ஷ்டவசமாக சத வாய்ப்பை இழந்ததைக் குறித்து அவரது தந்தை சுந்தர் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ''டெய்ல் எண்டர்களால் நான் மிகவும் ஏமாற்றமடைந்தேன். அவர்களால் சிறிது நேரம் கூட தாக்குப்பிடித்து இருக்க முடியாதா? வெற்றிபெற 10 ரன்கள் தேவை எனும் சூழல் இருந்திருந்தால்கூட இது பெரிய தவறு அல்ல. லட்சக்கணக்கான இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். டெய்ல் எண்டர்கள் என்ன செய்தார்கள் என்பதை அவர்கள் கற்றுக்கொள்ளக்கூடாது’’ என்று விமர்சித்தார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com