இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் சாத்தியமா ? ஐசிசி தலைவர் கருத்து !

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் சாத்தியமா ? ஐசிசி தலைவர் கருத்து !
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் சாத்தியமா ? ஐசிசி தலைவர் கருத்து !

இந்தியா - பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் தொடர் நடத்துவது குறித்து ஐசிசி தலைவர் கிரேக் பார்க்லே மனம் திறந்து பேசியுள்ளார்.

ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரேக் பார்க்லே அண்மையில் பதவியேற்றார். இதனையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துள்ளார். அப்போது பேசிய அவர் "எல்லோரைப் போலவும் நானும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டியை காண ஆர்வமுடன் இருக்கிறேன். இரு நாடுகளும் முன்பு இருந்ததைப்போல மீண்டும் கிரிக்கெட் உறவை தொடங்க வேண்டும். இரு நாடுகளுக்கு இடையிலான இருக்கும் பிரச்னைகளும் நான் அறிவேன்" என்றார்.

மேலும் பேசிய அவர் "இரு அணிகளும் மீண்டும் விளையாடும் சூழ்நிலையை ஏற்படுவதற்கான முயற்சிகளை ஐசிசி தொடர்ந்து மேற்கொள்ளும். எப்போதாவது விளையாடாமல் தொடர்ச்சியாக இரு அணிகளும் விளையாடக் கூடிய வாய்ப்புகளை உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதைத் தவிர, இந்தியாவும் - பாகிஸ்தானும் கட்டாயமாக விளையாட வேண்டும் என எங்களால் நிர்பந்திக்க முடியாது. அப்படி செய்வது ஒருபோதும் சரியானதாகவும் இருக்காது" என்றார் கிரேக் பார்க்லே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com