முகப்பு எங்களை பற்றி

இதழ் மட்டுமல்ல, ஓர் இயக்கம்


இன்று தமிழின் முன்னணி வார இதழ்களில் ஒன்றாகத் திகழும் புதிய தலைமுறை மூன்றாண்டுகளுக்கு முன் “இனி ஒரு விதி செய்வோம்!” என்ற மன எழுட்சியோடும், நம்பிக்கையோடும் துவங்கப்பட்டது மிகக் குறுகிய காலத்தில் தமிழ் மக்களின் அமோக ஆதரவைப் பெற்று விற்பனையில் சாதனை படைத்த இந்த இதழ் இன்று இளைஞர்களின் நம்பிக்கைக்குரிய இலட்சிய இதழாகத் திகழ்கிறது.


சமூகத்திற்கு ஆக்க பூர்வமாகப் பங்களிக்க வேண்டும் என்ற வேட்கையில் திரு. ஆர்.பி. சத்தியநாராயணன் அவர்களால் துவக்கப்பட்ட இந்த இதழ், திரு,மாலன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது.


தமிழ் வணிக இதழ்களில் வழக்கமாகக் காணப்படும் கட்சி சார்ந்த அரசியல், சினிமா நட்சத்திரங்கள் பற்றிய கட்டுரைகள், கிசுகிசுக்கள், புனைகதைகள், ஜோசியம், ஆன்மீகம் போன்ற பகுதிகளை ஒதுக்கி வைத்து விட்டு, ஒரு புதிய வாசிப்பு அனுபவத்தை வாசகர்களுக்கு வழங்கும் வார இதழ் புதிய தலைமுறை.


இளைஞர்களுக்கு எந்த விதத்திலும் பயனளிக்காத கட்சி அரசியலுக்குப் பதிலாக அரசின் செயல்பாடுகள் (governance) பற்றி எழுதுகிறது புதிய தலைமுறை. அதே போல வழிபாட்டு மனோபாவத்தை (cult) உருவாக்கும், அல்லது பாலியல் கிளர்ச்சியை ஏற்படுத்தும் சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய கட்டுரைகளைப் புறக்கணித்துவிட்டு வாழ்க்கையில் முன்னேறத் தேவையான சுயமுன்னேற்றம், வணிக உத்திகள், வாய்ப்புக்கள் சார்ந்த கட்டுரைகள் புதிய தலைமுறையில் பிரசுரமாகின்றன. புனைகதைகளுக்குப் பதிலாக வரலாறு, ஆன்மீகத்திற்கு பதிலாக அறிவியல், ஜோசியத்திற்குப் பதிலாக வாய்ப்புக்கள் குறித்த தகவல்கள் எனத் தமிழில் ஓர் புதிய இதழியலை புதிய தலைமுறை உருவாக்கியிருக்கிறது.


ஆண்டு தோறும் புதிய தலைமுறைப் பத்திரிகையாளர் திட்டத்தின் கீழ் இதழியலில் ஆர்வம் கொண்ட தகுதி வாய்ந்த இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களது திறமைகளைப் பட்டை தீட்டி ஓர் புதிய பத்திரிகையாளர் அணியை உருவாக்கி வருகிறது.


கல்வி குறித்த வாய்ப்புக்களையும் செய்திகளையும் விரிவாக எடுத்துச் சொல்லும் நோக்கத்துடன் வெளிவரும் இதழ் புதிய தலைமுறை கல்வி. கல்வி குறித்த செய்திகளோடு, சிவில் சர்வீஸ் உள்ளிட்டப் போட்டித் தேர்வுகளையும் +2 தேர்வையும் நம்பிக்கையோடு எதிர்கொள்ளும் வகையில் மாதிரி வினாத்தாள்களை வாரம் தோறும் வெளியிட்டு இளைஞர்களை ஈர்த்து வருகிறது புதிய தலைமுறைக் கல்வி இதழ்.


வெறும் சொற்களோடு நின்று விடாமல் செயலிலும் நம்பிக்கை கொண்ட இதழ் புதிய தலைமுறை. பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள +2 முடித்த மாணவர்கள் இலவசமாக உயர்கல்வியைத் தொடர புதிய தலைமுறை இலவச உயர்கல்வித் திட்டத்தின் மூலம் உதவி வருகிறது. தரம் வாய்ந்த கல்லூரிகளில் பி.இ, பி.டெக், பி.எட், பி.எஸ்சி நர்சிங், பி.பிடி போன்ற தொழில்முறைப் படிப்புகளில் இடம் பெற்று அந்த இடத்தை ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு அளிப்பதுதான் இலவச உயர்கல்வித் திட்டம். இந்த ஆண்டு (2012) 131 மாணவர்களுக்கு இந்தத் திட்டத்தின் கீழ் உதவியுள்ளது புதிய தலைமுறை. கடந்த மூன்று ஆண்டுகளிலும் சேர்த்து மொத்தம் 272 மாணவர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது புதிய தலைமுறை.


மாணவர்களுக்கு உதவுவது போலவே இளைஞர்களும் வாழ்வில் முன்னேற விதைகள் திட்டம் மூலம் வாய்ப்பளித்து வருகிறது. சுய தொழில் துவங்கி நடத்த விரும்பும் இளைஞர்களை குழுவாக இணைத்து அவர்களுக்குப் பயிற்சி அளித்து ரெப்கோ நுண்கடன் நிறுவனத்தின் மூலம் கடனுதவியும் பெற்றுத் தருகிறது. இதுவரை 1311 குழுக்களை உருவாக்கி (13000 இளைஞர்களுக்கு மேல்) 6 கோடியே 41 லட்ச ரூபாய்க்கு மேல் கடனுதவி பெற்றுத் தந்துள்ளது.


இவற்றைத் தவிர படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்குத் தனிப் பயிற்சி அளிக்கும் மையங்கள், மருத்துவ முகாம்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்றவற்றை புதிய தலைமுறை அறக்கட்டளை மூலம் செயல்படுத்தி வருகிறது. புதிய தலைமுறை அறக்கட்டளையின் இணைய தளம்: http://www.ptfindia.org


சுருக்கமாகச் சொன்னால் புதிய தலைமுறை வார இதழ் ஒரு புதிய விடியல், புதிய நம்பிக்கை, அது வெறும் இதழ் மட்டுமல்ல, ஓரு இயக்கம்.

 

 
 

இந்த வார இதழில்
இணைவார்களா?
தலையங்கம்
கொத்து பரோட்டா - 1
ட்வி(ஸ்)ட்டர்
விவாதம்
வீடு வாங்கப் போகும்முன் விசாரித்துவிட்டீர்களா?
செயலிகள் கவனிக்கவும் - 7
புதிய தலைமுறை இலவச உயர்கல்வித் திட்டம் - 2014
இந்த வாரம்: பீட்டர் அல்போன்ஸ்
கொத்து பரோட்டா -1
‘‘சாயந்திரம் வந்த மழை நைட்டு வந்திருந்தா மொத்தமா குளோஸ் ஆகியிருப்போம்’’
வையத் தலைமைகொள்!
இந்த வார GOOD... இந்த வாரக் குட்டு
‘‘என் புருஷன் அடிக்கிறார்... காப்பாத்துங்க...’’
உலகம்
பசுமைப் பக்கங்கள் - 1
பசுமைப் பக்கங்கள் - 2
Hi… டெக்னாலஜி
தீவிரவாதத்துக்குத் தீர்வு என்ன?
மீண்டும் சாய்னா!
முடிவுக்கு வருமா முல்லைப் பெரியாறு சர்ச்சை ?
இதயத்தில் கரையும் உயிரித் தொழில்நுட்பம்
போதையால் வீழ்ந்தோம்... கால்பந்தால் எழுந்தோம்..!
எம்ப்ளாய்மெண்ட்
இன்பாக்ஸ்
பருந்து பற பற... கழுகு பற பற...
வரலாற்றுப் பெட்டகம்!
 
இந்த வார கல்வி இதழில்