இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன், மற்றும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா ஆகியோருடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் 24ஆம் தேதி வெள்ளை மாளிகையில் நேரடியாக ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது நான்கு நாடுகளுக்கிடையில் உறவை வலுப்படுத்துவதும் குறித்தும், கொரோனா தொற்றை கூட்டாக எதிர்கொள்வது, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.