கொரோனாவு‌க்கு மருந்து: லாமா விலங்கை தேடிச்செல்லும் விஞ்ஞானிகள்!!

கொரோனாவு‌க்கு மருந்து: லாமா விலங்கை தேடிச்செல்லும் விஞ்ஞானிகள்!!
கொரோனாவு‌க்கு மருந்து: லாமா விலங்கை தேடிச்செல்லும் விஞ்ஞானிகள்!!

கொரோனாவு‌க்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் உலகமெ‌ங்கும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், நம்பிக்கையளிக்கும் வகையிலான புதிய ஆய்வு முடிவு ஒன்று வெளியாகி இருக்கிறது.

ஒட்டகத்தின் குட்டி போல இருக்கும் லாமா விலங்கு கொரோனாவுக்கான மருந்தைக் கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். இது ஒட்டகத்தின் வகையைச் சேர்ந்த வளர்ப்புப் பிராணி. தென் அமெரிக்க நாடுகளில் சரக்குகளை எடுத்துச் செல்வதற்காக விவசாயிகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறார்கள். லாமாக்களின் உடலில் ஒருவகையான எதிர் உயிரிகள் இயற்கையாகவே இருக்கின்றன.

 இந்த எதிர் உயிரிகள் கொரோனா பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என அமெரிக்காவின் டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். எஸ் புரோட்டின் எனப்படும் நீட்சி மூலமாகத்தான் கொரோனா வைரஸானது மனிதர்களின் செல்லில் நுழைகின்றன. லாமாக்களில் உள்ள எதிர் உயிரிகள் வைரஸ்களில் உள்ள இந்த நீட்சிகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டவை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த ஆராய்ச்சி, செல் என்ற அறிவியல் இதழில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த ஆராய்ச்சி நம்பிக்கையளித்தாலும், உடனடியாக இந்த சிகிச்சையை மனிதர்களுக்கு வழங்கிவிட முடியாது. முதலில் விலங்குகளிடம் சோதனை செய்து, பின்னர் மனிதர்களுடமும் இந்தச் சிகிச்சையை பரிசோதனை செய்ய வேண்டும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com