ஹமாஸ் இஸ்ரேல் போர்புதிய தலைமுறை
உலகம்
“ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தும் சுரங்கப் பாதையை கண்டுபிடித்துள்ளோம்” - இஸ்ரேல் அறிவிப்பு
காஸாவில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தும் சுரங்கப் பாதையை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும் இதுதொடர்பான வீடியோ ஒன்றையும் அந்நாட்டின் ராணுவம் வெளியிட்டுள்ளது.
காஸாவில் செயல்படும் அல் ஷிபா மருத்துவமனையில் 10 மீட்டர் ஆழத்தில் சுரங்கப்பாதை இருப்பதாகவும், அந்த சுரங்கப்பாதை பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டுள்ளது என்றும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தும் ஹமாஸ் குழுவினர், மருத்துவமனையை தங்கள் புகலிடமாக பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

al-shifa hospitalpt desk
கடந்த மாதம் 7 ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் படையினர் நடத்திய தாக்குதலில் 1,400 பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் நடத்திய பதில் தாக்குதலில் காஸாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்துள்ளது.