உலகின் முதல் ஓவியன் நியாண்டர்தால் மனிதனா? ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை சொல்வது என்ன?

உலகின் முதல் ஓவியன் நியாண்டர்தால் மனிதனா? ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை சொல்வது என்ன?
உலகின் முதல் ஓவியன் நியாண்டர்தால் மனிதனா? ஆராய்ச்சியாளர்களின் அறிக்கை சொல்வது என்ன?
Published on

மனித குலத்தின் பரிணாம மற்றும் நாகரீக வளர்ச்சி குறித்து எல்லோரும் கேள்விபட்டிருப்போம். அந்த வகையில் நாகரீக வளர்ச்சிக்கு முந்தைய கால கட்டத்தில் வாழ்ந்த ஆதி மனிதனான நியாண்டர்தால் மனிதர்கள் உலகின் முதல் ஓவியர்களாக இருந்திருக்க வாய்ப்பிருந்திருக்கலாம் என சொல்லும் விதமாக அமைந்துள்ளது Proceedings of the National Academy of Sciences வெளியிட்டுள்ள ஆய்வு இதழின் அறிக்கை. 

ஸ்பெயின் நாட்டின் மால்கா பகுதியில் உள்ள Ardales குகையில் நியாண்டர்தால் மனிதர்கள் வரைந்த குகை ஓவியங்கள் இருக்கின்றன. இவை பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. அந்த குகையில் உள்ள ஓவியங்களில் நியாண்டர்தால் மனிதர்கள் சிகப்பு நிறமிகளை புற்று போல உள்ள குகைகளின் பாறைகளில் (Stalagmite) வைத்து பயன்படுத்தி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் இந்த நிறமிகள் அனைத்தும் பல்வேறு காலகட்டங்களில் உருவாக்கப்பட்டவை. அனைத்தும் இயற்கையான வண்ண பூச்சு காலவைகளை கொண்டிருப்பதாகவும் ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.  

இதனை சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்னதாக அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என அந்த ஆய்விதழில் சொல்லப்பட்டுள்ளது. 

மேலும், அந்த காலகட்டத்தில் நாகரீக வளர்ச்சி பெற்ற மனிதர்கள் வாசித்திருக்க வாய்ப்பில்லை எனவும் சொல்லப்பட்டுள்ளது. இதையெல்லாம் அடிப்படையாக வைத்தே அந்த ஆய்வு வெளியிடப்பட்டுள்ளது. 

“இதன் முக்கியத்துவம் என்னவென்றால் அவர்கள் நம்மை போலவே வாழ்ந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அவர்களது செயல்பாடுகளும் நம்மை போலவே இருந்துள்ளன. குகைகளில் ஓவியம் வரைந்திருப்பது அதற்கு மிகமுக்கிய சான்று” என தெரிவித்துள்ளார் Proceedings of the National Academy of Sciences-இல் ஆய்வு கட்டுரைகளை எழுதி வரும் Joao Zilhao. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com