மியான்மரில் உள்ள பள்ளி மீது ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மியான்மர் அருகே லெட் யெட் கோன் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியை ராணுவத்திற்கு எதிராக போராடி வரும் புரட்சியாளர்கள் பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை ஒடுக்க ராணுவம் ஹெலிகாப்டர்களை அனுப்பி வைத்தது. தொடர்ந்து வான்வழியாகவே பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அங்கிருந்த 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து கொல்லப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றிய ராணுவம், அந்த கிராமத்தில் இருந்து 11 கிலோ மீட்டர் தொலைவுக்கு எடுத்துச் சென்று புதைத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்த ராணுவ ஆட்சியாளர்கள் தங்களுக்கு எதிராக போராடும் பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: ஹிஜாபை எரித்தும், தலை முடியை வெட்டியும் ஈரானில் பெண்கள் போராட்டம் - காரணம் என்ன?