2022-10-31 17:08:18

கனவு! நம் ஆழ்மனதின் வெளிப்பாடே கனவு. நம் நிகழ்கால ஏக்கங்கள், கவலைகள், பிரச்னைகளே கனவின் மூலம் வடிவம் பெறுகின்றன. சில நேரங்களில் நம் நிகழ்காலப் பிரச்னைகளுக்கு உரிய தீர்வுகளும் கனவுகளின் மூலமாகவே கிடைக்கிறது.

2022-10-31 17:08:18

தூக்கத்தை கெடுக்கும் குறட்டை! தூங்கும்போது சுவாசக்குழாய் சுருங்கி, சீரான சுவாசம் இல்லாததால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதானால் சில நொடிகள் சுவாசத்தில் தடை ஏற்படும். இந்த நேரத்தில் குறட்டை ஏற்படும்

2022-10-31 17:08:18

தூக்கத்தின் நன்மைகள்! மூளை செயல்பாட்டை அதிகரிக்கும். உடல், மனம் இரண்டுக்கும் புத்துணர்வு தரும். புத்திக்கூர்மையையும் செயல்திறனையும் அதிகரிக்கும். மனஅழுத்தம் குறைக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்தும். ஆயுளை நீடிக்கும்.

2022-10-31 17:08:18

தூக்கத்துக்கான காரணம்! மூளையில் சுரக்கும் மெலடோனின் என்னும் ரசாயனம் தான் தூக்கத்துக்கு காரணம். அந்தி சாயும் நேரம் இதன் சுரப்பு துவங்கும். இரவில் அதிகமாக சுரந்து காலை நேரத்தில் சுரப்பு சுத்தமாக நின்றுவிடும். தூக்கம் வருவதற்கு இதுவே முக்கியக் காரணம்.

2022-10-31 17:08:18

பல நாட்கள் தூங்காமல் இருந்தால்! எரிச்சல், கோபம், வேலையில் கவனக்குறைவு, மறதி, உடல் பருமன், மனச்சோர்வு, மன அழுத்தம், தலைவலி மற்றும் சோர்வு ஏற்படும்.

2022-10-31 17:08:18

சீரான தூக்கத்துக்கு உதவும் உணவுகள்! நட்ஸ், பழங்கள், முழு தானியங்கள், புரத உணவுகள், பச்சைக் காய்கறிகள், பால், க்ரீன் டீ, குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ள இட்லி, தோசை.

2022-10-31 17:08:18

படுக்கை அறை! புத்தகம், செல்போன், லேப்டாப் மற்றும் உணவுப் பொருட்களை படுக்கையறையில் வைக்கக்கூடாது. தூங்குவதற்கு மட்டும் படுக்கையை பயன்படுத்த வேண்டும்.

2022-10-31 17:08:18

பகல் தூக்கம்! பகல் தூக்கம் நம் விழிப்புணர்வை அதிகரிக்கும். செயல்திறனையும் 24% அதிகரிக்கும். அழுத்தம் மிகுந்த வேலை செய்பவர்களை இதய நோயிலிருந்து பாதுகாக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

2022-10-31 17:08:18

அதீத தூக்கம் ஆபத்து. உடல் உஷ்ணம் அதிகரிக்கும். செரிமானக் கோளாறு, மனச்சோர்வு, உடல் வலி, உடல் பருமன், இதய நோய்கள், சர்க்கரை நோய், நினைவாற்றல் இழப்பு, பக்கவாதம் மற்றும் அல்சைமர் போன்றவற்றை ஏற்படுத்தும்.

2022-10-31 17:08:18

சரியான தூக்கம்! நாம் தூங்கும்போது கண்கள் வேகமாக அசையும், இதை REM நிலை என்பார்கள். இந்த நிலையில் உடலின் அனைத்து பகுதிகளும் சுயக்கட்டுப்பாட்டை இழக்கும். நம் உடல் முழுவதும் மூளையின் கட்டுப்பாட்டில் இருக்கும்.