'அப்பா தூங்குறாரு பாத்துக்கோங்க' - மது போதைக்காக தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

'அப்பா தூங்குறாரு பாத்துக்கோங்க' - மது போதைக்காக தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது
'அப்பா தூங்குறாரு பாத்துக்கோங்க' - மது போதைக்காக தந்தையை அடித்துக்கொன்ற மகன் கைது

கடலூரில் ஓய்வுபெற்ற துணை ஆட்சியர் ஒருவர், மதுப்பழக்கத்துக்கு அடிமையான மகனால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடலூர் ஆனகுப்பத்தில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன். ஓய்வுபெற்ற துணை ஆட்சியரான இவரும், மகன் கார்த்திக்கும் அங்கு வசித்துள்ளனர். கார்த்திக் மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர் என கூறப் படுகிறது. மது அருந்துவதற்காக பணம் கேட்டு தந்தையுடன் தினமும் சண்டையிட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் உறங்கும் தனது தந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு, பக்கத்துவீட்டுக்காரரிடம் கூறிவிட்டு கார்த்திக் வெளியே சென்றுள்ளார். ஆனால் வீட்டின் உள்ளே, பலத்த காயங்களுடன் சுப்பிரமணியனின் உடல் கிடந்ததைக் கண்ட அவர், காவல் துறையினரை வரவழைத்துள்ளார்.

அங்கு சென்ற காவல் துறையினர், இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சுப்பிரமணியனின் உடலை மீட்டனர். வீடு முழுவதும் காலி மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. காலியான சிகரெட் பாக்கெட்டுகளும் ஏராளமாக கிடந்தன. விசாரணையில், மது குடிக்க பணம் கேட்டு வழக்கம்போல சுப்பிரமணியனுடன் தகராறு செய்த கார்த்திக், இரும்புக்கம்பியால் தந்தையை அடித்துக் கொன்றது தெரியவந்துள்ளது.

மது அருந்த வேண்டும் என்ற அவசரத்தில் இருந்த கார்த்திக், தனது தந்தை தூங்குவதாக எண்ணி பக்கத்து வீட்டுக்காரரிடம் கூறிவிட்டு வெளியே சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து, கார்த்திக்கை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com