"கொரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுக" - மருத்துவத்துறை செயலர்

"கொரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுக" - மருத்துவத்துறை செயலர்
"கொரோனா தடுப்பு வழிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுக" - மருத்துவத்துறை செயலர்

தமிழ்நாட்டில் கொரோனா முற்றிலும் ஒழியவில்லை என்பதால், முகக்கவசம் அணிவது, கைகழுவுவது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் தொடர்ந்து பின்பற்றுமாறு மருத்துவத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை - ஷெனாய் நகரில் நடைபெற்ற புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாடு முழுவதும் நூறு கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடியே 40 லட்சம் டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார்.

எனினும், தமிழ்நாட்டில் ஒரு கோடியே 80 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை என்று ராதாகிருஷ்ணன் சுட்டிக்காட்டினார். மேலும், கொரோனா முற்றிலும் ஒழியவில்லை என்பதால், மக்கள் அலட்சியத்துடன் நடந்து கொள்ளக் கூடாது என்றும், கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைத் தொடர்ந்து பின்பற்றுமாறும் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com