வீடியோ ஸ்டோரி
"நாங்கள் யாருக்கும் அடிமையில்லை: அடிமையாக இருப்பது திமுக தான்" - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்
அடிமையாக இருப்பது திமுக தான், தாங்கள் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சேலத்தில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி பேசும்போது...
“எப்போது பார்த்தாலும் ஸ்டாலின் சொல்கிறார், எடப்பாடி பழனிசாமி பாரதிய ஜனதா கட்சிக்கு அடிமையென்று. நாங்கள் எப்பொழுதுமே, எந்தக் கட்சிக்குமே அடிமையில்லை என்பதை பலமுறை தெளிவுபடுத்தியுள்ளேன். ஸ்டாலின் அவர்களே உங்களைப் போல் கொள்ளையடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக நீங்கள் அடிமையாக இருக்கலாம். ஆனால், அதிமுக தொண்டனும் சரி, நிர்வாகிகளும் சரி எவரும் எந்த கட்சிக்கும் அடிமையில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன்” என்றார்.