இடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் - தமிழிசை

இடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் - தமிழிசை
இடைத்தேர்தல் நடக்கலாம்; நடக்காமலும் போகலாம் - தமிழிசை

திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் இடைத்தேர்தல் வரும் 28 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் ஆதரவும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

ஆனால் திருவாரூர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் சாகுல் அமீது போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முதன் முதலாக அறிவிப்பு வெளியிட்டார்.

இதையடுத்து அமமுக சார்பில் எஸ்.காமராஜ் என்பவர் போட்டியிடுவார் என டிடிவி தினகரன் அறிவிப்பு வெளியிட்டார். பின்னர், இன்று நேர்காணல் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின், பூண்டி கலைவாணன் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

ஆனால் நேற்றே வேட்பாளர் யார் என பரிசீலிக்கப்படும் ஆட்சி மன்றக்கூட்டம் இன்று ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் இன்று மாலை அதிமுக சார்பில் வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்றது. அதன் பின்னர் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடைபெற்றது. முதலமைச்சர், அவைத்தலைவர் உள்ளிட்டோர் நேர்காணல் நடத்தினோம். இன்னும் ஓரிரு நாட்களில் அதிமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார்” எனத் தெரிவித்தார்.

இதனிடையே பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைக்கிறதா என்ற கேள்வி மக்களிடையே எழும்பி வருகிறது. இந்நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலை இல்லத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருவாரூரில் இடைத்தேர்தல் நடக்கலாம் நடக்காமலும் போகலாம் என தெரிவித்தார்.

மேலும், திருவாரூரில் தேர்தலை சந்திக்க மு.க. ஸ்டாலினுக்கு உள்ளுக்குள் பயம் இருக்கிறது எனவும் இடைத்தேர்தலை விட மக்களவை தேர்தலில் தான் அதிக கவனம் செலுத்துவதே எங்கள் நோக்கம் எனவும் குறிப்பிட்டார். முதல்வருடனான சந்திப்பில் கூட்டணி குறித்து ஏதும் விவாதிக்கப்படவில்லை என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com