
சரவணன் வீடியோ விவகாரம் குறித்து பேச ஆளுநரிடம் நேரம் ஒதுக்குமாறு கேட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சரவணன் வீடியோ விவகாரம் குறித்து இரண்டாவது நாளாக இன்றும் பேச அனுமதி மறுக்கப்பட்டதால் சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், "எம்எல்ஏ சரவணன் தொடர்பான வீடியோ விவகாரம் குறித்து நேற்றே நேரமில்லாத நேரத்தில் பேச அனுமதி கேட்டாம். ஆனால் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பேச அனுமதிக்க முடியாது என சபாநாயகர் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மேலும் எங்களை குண்டுக்கட்டாக வெளியேற்றினர்.
இன்றும் சட்டப்பேரவையில் எம்எல்ஏ சரவணனின் வீடியோ விவகாரம் குறித்து பேச அனுமதி கோரினாம். ஆனால் இன்றும் சபாநாயகர் அனுமதி மறுத்தார்.
சட்டப்பேரவை விதியின் படி, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் கருத்துகளை தான் சொல்லக் கூடாது என்று இருக்கிறது. ஆனால் இந்த வீடியோ விவகாரம் குறித்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவதா..? அல்லது வேண்டாமா என்ற முடிவே 16-ஆம் தேதி தான் விசாரணைக்கு வருகிறது. இதற்கிடையில் இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசுவது தவறு கிடையாது என சபாநாயகரிடம் தெரிவித்தேன். ஆனால் திட்டவட்டமாக சபாநாயகர் வாய்ப்பு மறுத்ததால் அதனை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தோம்" என்றோர்
மேலும் இந்த விவகாரம் குறித்து பேச ஆளுநரிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார். 89 எம்எல்ஏ-க்களுடன் திமுக பெரிய எதிர்க்கட்சியாக உள்ளது. அப்படியிருக்க சட்டப்பேரவையில் இந்த விவகாரம் குறித்து நாங்கள் பேசாவிட்டால் மக்கள் எங்களை காரி துப்புவார்கள் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.